ஓர் ஏழை பெண் ...!


மூவகு பின்னல் எடுத்து
ஓர் வண்ண ரிப்பன் கட்டி
அழகிய பிரிவின் நடுவே
அலங்கரிக்கும் மலர்கள்

பழைய சேலையை
கிழித்து பாதியாய்
போர்த்திய தாவணி

தாமரை குளத்தில்
தண்ணீர் தூக்கும் குடம்
தத்தளிக்கும் கொடியிடையில்

களைப்பில் கரையும்
சிவப்பு கலர் சாந்துப்
பொட்டு

தொலைக் கட்சியில்
தொலைத்தபடி
மனது

முத்தான சத்தத்தில்
முகிலும் சத்தான
பொன் சிரிப்பு

கள்ளத்தனமாய் கண்ணடித்து
கட்டை விரலால்
போட்ட கோலங்கள்

எல்லாம் கண்டேன்
கனவில் அல்ல
என் கை வண்ண
ஓவியத்தில்
ஓர் ஏழை பெண்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...