நாட்டை சமாதியாய் மாற்றிவிடதே...!


மாண்ட இதயத்தோடு
மலர்மாலை பல்லாக்கில்
அமர்ந்த நீ மக்கள் பணத்தில்
ஆண்ட அரசனாய்

உன் ஒய்யார ஊஞ்சலில்
ஐய்யாயிரம் கோடி
காந்தி நோட்டில் உன்
காலச் சக்கரம் சுழலுகிறது
இதோ

வாரி அணைக்கும்
வாழ்வற்ற மக்களை மறந்து
உன் வாழ்க்கைக்கு தேவையற்ற
அணை கட்டு ஊழலில்
அமைதியாய் இருப்பது சரியா

பொழியும் தூரம் அறியா
புண்ணிய நதியில் கலக்கும்
பலரது கண்ணீர் நதியில்
கைதட்டும் நதித்திட்ட ஊழலில்
உயிரை வளர்ப்பது முறையா

அறியா தவறைப் போல் அறிந்து
செய்யும் அரசாங்கமே உன்னை
புரிந்துகொண்ட மக்களை
புதுப்பிக்க மறந்து
சபிக்க வைத்துவிடாதே
நாட்டை சமாதியாய் மாற்றிவிடதே...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)