கண்ணீர் ....!

பிறப்பிடம் தெரியவில்லை
சுரக்குமிடம் தெரியவில்லை
இருந்தும் ............
வற்றாத நீராய்
வடிந்துகொண்டே இருக்கிறது
அவரவர் கண்களில் ....!
*************************************************

அடித்தவன் ஒருவன்
அதில் .....
கையெப்பம் மிடுபவர்
எவரோ .....?
இருந்தும் கை கூலியாய்
கண்ணீர் வடிப்பான்
ஏழை .........!
*************************************************

படித்து பட்டம் வாங்கியவன்
குடித்தும் படிக்கிறான்
காதலில் தோற்ற
காயங்களை எண்ணி எண்ணி
தண்ணீரில் கண்ணீர்
குடிமகனாய் ...........!
*************************************************

கடல் கொண்ட உயிரினங்கள்
கரை கண்ட உயிர்களை
களவாடி கரை சேர்க்கும்
பிணங்களை நினைவுட்டும்
கண்ணீர் அஞ்சலிகள் ..............!
*************************************************

வாடிய உயிர்கள்
தேடிய பயிர்களை
தாங்கி நிற்கும்
வேரை நிலைப்படுத்த
நீல வானத்தின்
கண்ணீர் மழைகள் ...........!

*************************************************
No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...