சாலையின் ஆட்டோகிராப் ...!


சாலையில் வேலை செய்து
மாலையில் அலுப்புடன்
அசந்துறங்கும் பூக்கள் நடுவில்
வாகன ஒளியில் வாய்விட்டு
அழுகும் பச்சிளம் குழந்தைக்கு
பாலுட்டும் தாய்மையின்
கண்ணீர் துளிகள்
கரையும் முன் நினைவை
இழந்த ஓட்டுனரின் நிலை
தடுமாறும் நொடியில்
இரத்த பூக்களாய் சத்தமில்லாமல்
தூங்குகிறது பார்க்கிங் செய்த
பிணங்களாய் நூற்றி எட்டை நோக்கி ........

****************************************************
பள்ளிச் சீருடையில்
பச்சிளம் தென்றலாய்
ஆடிப்பாடி அருஞ்சுவை
உணவுடன் A முதல் Z வரை
கற்று தெளிய காரில் சென்று
பட்டி தொட்டியெல்லாம்
பாராட்டும் மொட்டுக்கள்
மலரும் முன் மரணத்தின் வாயில்
சிக்கி சிதறும் இதழ்களாய்
சின்னா பின்னமாய் எண்ணிக்கையை
கூட்டும் செய்தி தாளாய்
விடியலின் வாசலில் மறைகிறது
குப்பைத் தொட்டியை நோக்கி .....!

****************************************************
மாற்று திறனாளிகள்
மயக்கும் பசியால்
பச்சைகொடி காட்டும் முன்
பிச்சை கேட்டு அவர்களின்
கொச்சை மொழியால்
எச்சில் இலையில்
மூச்சை வளர்க்கும்
பேச்சில்லா பிண்டமாய்
சாலையை கடக்கும் போது
ஓலையின் விதியில்
ஒளிந்திருக்கும் அநாதை
பிணமாய் பணத்தை
சுற்றி மொய்க்கும் ஈக்களை
நோக்கி ........

****************************************************
மீட்டர் வேகத்தில்
ரோட்டில் பறக்கும்
இரண்டு மூன்று நான்கு
சக்கர வாகனத்தில்
வேகத்தடையை தாண்டி
மோகத்தடையில் செல்லும்
மனிதன் தன் யோகத்தடையில்
மிஞ்சும் உயிர்கள்
சேதார தடையில் பெருகும்
கன்னா பின்னா காசில்
மருத்துவ வாசலை கண்டு
பொருத்தும் பண்டமாய்
கத்தி குத்தில் காலத்தை
எண்ணும் கல்லறையை நோக்கி .........

****************************************************
விதிக்கும் பயந்து
விண்ணில் பறந்தவன்
கருக்கும் மேகத்தில்
காற்றில் சிக்கிய
காத்தாடி போல்
கடல் கண்டு மலை கண்டு
மண்ணில் எரியும்
விளக்காய் உயிரை சுட்ட
சாம்பலாய் முகவரியை தேடி
முதுகெலும்பை எண்ணும்
எமனின் பாசக் கயிற்றில்
தொங்கும் ஆவியாய்
சொர்க்கமாய் நரகமாய் என
தெரியாமல் தேடும்
ஆத்மாவை நோக்கி ............

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...