நொச்சிக்குப்பம் ......!


மெரினா கடற்கரையில் - வாழும்
மீனவ குடும்பங்களே

சில்லென்ற மேனியிலே - காற்றில்
சிரிக்கும் வெள்ளலையோ அதில்

காலை கதிரவனை - எழுப்பும்
கட்டுமர படகினிலே மிதக்கும்

வலையாய் வசியம் செய்து
வங்கக் கடல் முத்தெடுத்து

விலையாய் பேசும் மொழியில் - தூய
வாய்மொழி உயிர்ப்போடு

மனத்தால் பெற்றெடுத்த - மாணவ
மாணிக்கங்களை சடுகுடு கில்லி

முதல்கேலியாய் விளையாடும் கிளிஞ்சல்களின்
கோலியும் பல்லாங்குழியும் செல்ல

குமரிகளின் செங்கழுத்தில் தவழும்
சங்கு மாலைகளும் விடாது

மழையும் பொழியும் நாளில்
வீட்டில் ஒய்வெடுத்து படாது

பாடுபட்ட படகுகளை பலபலவென
செம்மலிட்டு நடக்கும் காற்றினிலே

நடந்தாடும் முதியவர்கள் சிரிக்கும்
மனத்தால் இனிக்கும் கதைகளுடன்

கைகோர்த்த குழந்தைகளுடன் களைப்பின்றி
கடந்து சென்றமாதம் மறையும் பின்னே

மாலை நிறைமதியில் மாவிளை
பொங்கலிட்டு கடல் மேல்

பள்ளிகொண்ட கன்னியின் மனம்
மகிழ காணும் பொங்கலாய்

கரும்புத் திருவிழாவில் சிலம்பாட்டம்
ஒயிலாட்டம் புலியாட்டம் என்று

சிறப்புடன் விளையாடி பால்குடம்
பல கொண்டும் எல்லையம்மனின்

தேகம் தேடி யாகமாய் மாற்றும்
தாயின் கம்பீர கலங்கரை

விளக்காய் தினம் தினம் கரை
சேர்ந்து கடல் தந்த உழைப்பால்

பலன் கண்ட குப்பமே எங்கள்
நொச்சிக்குப்பம் ......!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145