தேவை ஒரு விவசாய புரட்சி... !


பாலித்தீனுகும் பறவைக் காச்சலுக்கும்
மதிப்பு கொடுக்கும் நண்பா
பழைய சேற்றுகும் பானை பொழப்புக்கும்
மதிப்பு கொடுக்க மறந்ததேன்

சேலை நெய்ய பருத்தி வேண்டும்
ஓலை நெய்ய தென்னை வேண்டும்
வேலை செய்ய நிலம் வேண்டும்
வேர்வை சிந்த விவசாயம் வேண்டும்

எட்டடுக்கு மாடியிலும் எட்டி பார்க்கும்
பொன்னியரிசி நீ ஆறடி போகையிலே
அள்ளிப் போட வேணுமட வாக்கரிசி
பாஸ்ட் புட்டு காலமெல்லாம்
பாடை கட்டப் பார்க்கு இந்த பாதை
மாறி வாழ்ந்து பார்த்தாள்
பவ மன்னிப்பு கிடைக்குது

ஏழு லோகம் சுத்தி வந்த
என்ன பெத்த ராசா நீ
என்னாதான் சம்பாதிச்சாலும்
வாயிக்கு ருசியா ஆக்கிப்போட
வேணுமட அரிசி கொஞ்சம் லேசா

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்
மாறி போனது அன்று இனி
வீட்டுக்கொரு விவசாயம் செய்வோம்
மாறப்போகுது இன்று

உழவனுக்கு திருநாளாம் அதுவே
ஊரெல்லாம் வருடத்தின் முதல் நாளாம்
உழவும் இப்பே இல்லேனான் நாம்
உயிர் வாழ்வது சில நாளாம்

ஆடு மாடு கூட்டம் போல
வீடு மாடி பெருகுது குழந்தைங்க
ஓடி ஆடி விளையாட
ஒற்றை மாடி தான் மிஞ்சப்போகுது

சுதந்திரமெல்லாம் இயந்திரமாய்
மாறிப் வரும் காலத்தில்
சுகாதார கேட்டாலே
சுடுகாடாய் நாற்றம் வீசப் போகுது

பேனா பிடிக்கும் கையாலே
ஏர் பிடிக்க கத்துக்கோடா தோழ நீ
ஏழை தலைமுறைக்கே எடுத்துக்காட்டாய்
வாழ்ந்து காட்ட வாடா
விவசாய விஞ்ஞனியா வாடா

புரட்சி செய்வோம்
புரட்சி செய்வோம் வாடா
பொன்னு விளையிற பூமியிலே
பொருள விளையவைப்போம் வாடா

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145