சே.குவேர - ஒரு மாமனிதன்


ஜூன் பதிநான்கில்
வான் பார்த்த மன்னனே
போராளி பெயரால்
ஊராள வந்த சிங்கமே - நீ

ஐந்தில் முதல்வனாய்
அரசாச்சி கண்ட ஆண் மகனே
ஆஸ்துமா ஆட்கொண்ட போதும்
அயராது விளையாடிய ரக்பி வீரனே

மருத்துவ துறையில்
மனம் நாடிய போதும்
மார்க்சியத்தில் ஈடுபட்ட
புரச்சி வேந்தனே -மீண்டும்

கியூபா புரட்சியால்
கரந்தடிப் போர்முறை
கட்டுரையில் குடியேற்றிய
கார்கால காவியனே - உன்னை

குளியல் சிக்கனத்தில்
பன்றி பட்டப் பெயர் கொண்ட
சாங்கோ பொருளுரைக்கு நீ
சதுரங்கத்தை பன்னிரெண்டில்
சுற்றிய கையேடு

கவிதை விரும்பி
அரும்பும் நூலகமாய்
மூவ்வாயிர எண்ணிக்கையில்
மோட்டார் ஈருருளிக்
நூலால் திரைப்பட விருதை
தட்டி சென்ற தொழுநோய்
தொண்டின் இறக்கமாணவனே


இலத்தீ அமெரிக்காவை
பாகம் பிரிக்கா பக்குவ
குடிமகனே
சே எண்ணும் தோழனாய்
தோள் கொடுத்து வந்த உன்னை

வாரி எடுத்தது ராணுவம்
வாழ்வை பறிக்கும் போது
வாடா ஒரு நிமிடம் பொறு
நான் எழுந்து நிற்கிறேன்
பிறகு என்னை சுடு என்ற
நீ சோசலிச ராஜவே

உன்னை இழந்த
மனைவி பிள்ளை
மார் தட்டி
பெருமிதம் கொண்டதுபோல்
நாங்களும் பெருமிதம்
கொள்கிறோம்

நாளைய உலகை
நல்லதோர் சோசலிச
ஆச்சியாக மாற்றுவோம்
என்று மனதார வேண்டி
இக்கவிதையை சமப்பிகிறேன்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145