உண்மையின் வெளிச்சம் ....!


விமலா தேவி இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் இதில் தேவி அடக்கம் அமைதி பண்பு மரியாதை தெரிந்த பெண் இருந்தும் அறிவில் கொஞ்சம் மட்டம் என்பதால் விமலா செய்யும் தவறுகளுக்கெல்லாம் தேவியே பொறுப்பேற்று திட்டு வாங்குவது வழக்கம் .................... 

ஓர் நாள் அதே போல் விமலா சரண்டர் செய்ய சொன்ன எண்ணை தேவியும் சரண்டர் செய்தாள் ஒரு வாரம் கடந்தாது அவர் அலுவலகத்தில் உள்ள AGM வெளியூர் சென்றார் அப்போது அவர் கொண்டு சென்ற internet photon வேலை செய்யவில்லை 

உடனே விமலாவிற்கு போன் செய்து internet photon வேலை செய்யவில்லை என்னம்மா வேலை செயிறேங்க ஒரு பொறுப்பே இல்ல எல்லாம் Time Pass க்குதான் வேலை செய்றேங்க என்றார் 

உடனே விமலா தேவியிடம் நீ நான் சொன்ன எண்ணை சரண்டர் செய்யாமல் வேறு எண்ணை சரண்டர் செய்து எண்ணை திட்டு வாங்க வைத்து விட்டாயே இதை நான் எம்டியிடம் கூறாப்போகிறேன் என்றவாறு சென்றாள் .... 

இடையில் போன் வந்தது விமலா நெட்வொர்க் ஆகாததால் இன்டெர்நெட் வேலை செய்யாமல் இருந்தது இப்போது வேலை செய்கிறது என்று sorry கேட்டார் AGM 

உடனே விமலாவும் ஓகே சார் என்று போன் வைத்துவிட்டு அமைதியாக 
இருக்கையில் அமர்ந்தாள் ......... 

அன்று இரவு 
ஹலோ நான் தான் மனச்சாச்சி பேசுறேன் ............. 
ஏன் அழுகிறாய் ......... 
அதுவா நான் செய்த தவறை நினைத்து தான் 
என்ன தவறு செய்தாய் .........? 
என்னுடன் பணிபுரியும் எனது தோழியிடம் அவள் செய்யாத தவறுக்காக அதிகமா கோவப் பட்டுவிட்டேன் 
இருந்தும் மன்னிப்பு கேட்க மனம் தடுமாறுகிறது ........! 

அப்படியா ......? ஓகே நீ செய்த தவறை நீயே அறிந்தபின் ஏன் மன்னிப்புக் கேட்க தயக்கம் ............ 

அதுவா நான் போய் கேட்டால் என் மதிப்பு குறைந்துவிடும் அதானல் இதை அப்படியே மூடிவைக்க போகிறேன் சோ நீ கொஞ்சம் நேரம் என்னை தொந்தரவு செய்யாதே என்று தூங்கிவிட்டாள் 

மாதம் முடிந்தது ஓர் நாள் அவள் அலுவலகத்திற்கு இன்டர்நெட் பில் கொரியரில் வந்தது அதை தேவியே வாங்கி படித்து பார்த்தாள் பின் தனது மேலிடத்திருக்கு அனுப்பினாள் 

அவளும் அதை பார்த்துவிட்டு காசோலை கொடுக்க சொல்லி தேவியிடம் கூறினாள்  தேவியும் அவ்வலுவலகத்திற்கு போன் செய்தால் காசோலையை வாங்கி செல்ல அவரும் வந்தார் 

வந்ததும் காசோலை தொகையை கண்டும் திகைத்தார் மேடம் இந்த தொகை தவறுதலாக எழுதியுள்ளது எங்களுக்கு வரவேண்டிய தொகை Rs.5700௦௦ நீங்கள் 700௦௦ குறைத்து போட்டுள்லேர்கள் சோ இது என்ன கணக்கு என்றார் 

உடனே தேவி சார் நாங்கள் இதில் உள்ள ஒரு இன்டர்நெட் நம்பர் சரண்டர் செய்துவிட்டோம் சோ அத்தொகையை கழித்து காசோலை போட்டுள்ளோம் என்றாள் 

உடனே அவர் இல்லை மேடம் நீங்கள் சரண்டர் லட்டர் எதும் கொடுக்காததால் அந்த எண் சரண்டர் செய்யவில்லை அதனால் நீங்கள் அத்தொகையும் சேர்த்து தான் செலுத்தவேண்டும் என்றார் உடனே தேவி சார் உங்க ஆபீஸ்ல் தான் லட்டர் எதும் வேண்டாம் நாங்கள் சரண்டர் செய்துவிடுகிறோம் என்று கூறினார்கள் அப்படி என்றால் தவறு உங்களிடமே சோ நாங்க எப்படி பணம் செலுத்த முடியும் என்றாள் தேவி 

உடனே சாரி மேடம் இப்போது இருக்கும் பெண்கள் கொஞ்சம் புதுசு சோ அதில் உள்ள பாதி தொகையை நீங்கள் கட்டினால் போதும் . 

அப்படியே ஒரு சரண்டர் லட்டரும்  கொடுத்தால் நன்றியாக இருக்கும் என்றார் 

ஓகே சார் நான் லட்டர் தருகிறேன் அன்று நான் சரண்டர் செய்த எண் இதுவா கொஞ்சம் கூறுங்களேன் ...என்றாள் 

உடனே அவர் கூறிய எண்ணும் அன்று சரண்டர் செய்த எண்ணும் மிகவும் சரியாக இருந்தது சோ அன்று அவள் செய்தது மிகவும் சரியானது என்று அப்போது தான் புரிந்தது 

உடனே தேவி விமலாவிடம் நீ அன்று சொன்னாய் நான் சரண்டர் செய்த எண் தவறு என்று என்னை எம்டியிடம் திட்டு வாங்க செய்தாய் ஆனால் அன்று நான் செய்தது சரிதான் நீ தான் தவறாக என்னை மாட்டி விட்டு வேடிக்கை பாத்திருக்கிறாய் இதை நான் போய் எம்டியிடம் சொன்னால் உன் வேலையே போய் விடும் என்று கத்தினாள் 

இதை கேட்ட MD அவர் அறையில் இருந்து வெளியே வந்து விமலாவை கண்டபடி திட்டினார் நீ இதற்கு முன் செய்த தவறுகள் எல்லாம் தேவி தான் செய்தாய் என்று கூறீனாயே அதுவும் இதே மாதிரிதான் நடந்திருக்கும் என்று அவளை வேலையை விட்டு போகச் சொன்னார் 

விமலாவின் முகம் செத்து விட்டது அன்றே ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் இவளவு பெரிய அவமானம் நடந்திருக்காது எண் வேலையும் போயிருக்காது நான் செய்த தவறுக்கு நல்ல தண்டனை கிடைத்தது என்று அழுதுகொண்டே சென்றாள் 

உடனே தேவி தனது எம்டியிடம் பேசி அவ்வேலையை அவளுக்கே வாங்கி தந்தாள் அவளும் தேவியின் பெருந்தன்மையை நினைத்து நன்றி கூறினாள் 

இதுவரை விமலா செய்த அனைத்து தவருதளுக்கும் தேவி திட்டு வாங்கியதை நினைத்து வெக்கி தலைகுனிந்து அதற்கு நன்றி கடனாய் இன்றையில் இருந்து உண்மையான வாழ்க்கை வாழ தொடங்குகிறேன் என்று உறுதி மொழி எடுத்தாள் 

அலுவளகத்தில் உள்ள அனைவரும் தேவியின் பெருந்தன்மையே நினைத்து பாராட்டினார்கள் 

அப்போது தேவி சொன்னாள் உண்மை வெகு நாட்கள் தூங்காது விரைவில் வெளிச்சம் போட்டுக் காட்டும் என்று கூறி தனது பணியை தொடர்ந்தாள் வெற்றியுடன் ...! 

எழுதியவர் 
உங்கள் ஹிஷாலீ.

2 comments:

  1. உண்மையின் வெளிச்சத்தை அருமையாக சொல்லி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

    Profile Photo மாற்றி விட்டீர்களே... விஜய் ரசிகரோ..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா !

      ஆம் எனக்கு விஜய் என்றால் கொள்ளப் பிரியம் அதான் மாற்றினேன் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145