ஒப்பில்லா உழவு... !


இலவச மின்சாரம்
இந்திய பட்ஜெட்டில் உழவன்
ஏர் பிடிக்கவில்லை
எரிபொருளை வீணடிக்கவில்லை

வேளாண்மை திட்டத்தில்
வேடிக்கை பேச்சுக்கள் அங்கே
கூழ் குடிக்கவில்லை கூட்டுறவுமில்லை
பாட்டுறவு தோட்டத்திலே பாடுதுபார்

பேயிக்கு ராத்திரியாம்
நோயிக்கு மாத்திரையும்
என்று பேர் சொல்லும் உலகில்
உழவுக்கு யாத்திரையாம்
உணவுக்கு மாத்திரையாம்
என்று எவரும் கூறவில்லை இதை
ஏரும் மறந்ததில்லை...!

மும்மாரி மழையுமில்லை
முப்பொழுதும் விளையும் பயிருமில்லை
எப்பொழுதும் விஞ்ஞானம்
ஏற்றமிறக்க நிலையுமில்லை இதனால்
வாடிய பயிர்களுக்கு வலிக்கவில்லை
வான் மகள் பூமிக்கு வருத்தம் கொள்ளை

தேன் மழை பொழியும் தேகத்தில்
வியர்வை ருசிக்கவில்லை
விருந்தும் புசிக்கவில்லை
மனிதன் மாறிவிட்டான் - அதற்கேற்ப
மண்ணும் மாறிவிட்டது
இன்னும் விதைக்கவில்லை என்றால்
கொன்னு குவிக்கவேண்டும் இல்லை
சோமாலியா கொடுமையை உணரவேண்டும்

கரும்பை விதைத்து இரும்பு வாங்கியவன்
கல்லை ஒடைத்து காப்பு வாங்கினான்
பயிரை விதைத்து உயிரை வாழவைத்தவன்
பிளாட்டு போட்டு பணத்தை வாங்கினான்

காணி நிலம் கையளவு பணம்
போணி செய்கையிலே
பொய்யானது பணம் இதோ

ஐஞ்சுக்கும் பத்துக்கும்
கடன்வாங்கி
ஆட்டுபுளுக்கையும் மாட்டுச்சாணமும்
உரமா போட்டு

நாத்து நட்டி நீர் பாய்ச்சி
நல்ல சோறும் மண்ணும் சோறும்
சேர்த்து குழப்பி
உண்ட பசி தீரும் முன்னே

கந்து வட்டி கழுத்தறுக்க
தாலி கட்டி வந்தவளின்
தேகம் தவிர்த்து அடகுவைக்க

இது தேவையானு
வறுமை கேட்கையிலே
பொறுமையாய் புன்னகித்தேன்
நான் வளர்த்த மகசூலுக்கு அதை
நாலாவதாக ஒருத்தன் வந்து
லாபம் பெற

இதைக் கண்டும்
கண்ணீர் வரவில்லை கடவுளுக்கு
கண்ணும் தெரிவதில்லை
எண்ணி அழுவதாலே
இறைவன் வருவதில்லை இனி
உயிர்களும் நிரந்திரமில்லை

உறங்காமல் சுத்தும் உலகத்தில்
உழவனே இறைவனே என்று
உணரும் வரை...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145