காற்றில் பேசும் காதல் ...!


நண்பனே
நானும் நீயும்
நடக்கும் சாலையில்
நாணத்தில் பேசும்
விழிகள்

யாகத்தில் மறந்தாலும்
யோகத்தின் தூண்டுதலால்
தூரக் கதிர் வீச்சில்
துளையும் மனது

ஓர்நாள் காண
மறந்தால் மறுநாள்
திரும்பும் திசையில்
தேடி போகும்
கண்கள்

காதலை சொல்லாமல்
சொல்கிறது சொல்லாத
மனங்கள்

இருந்தும்
காலத்தின் மாற்றத்தால்
காதல் சந்திப்பாய்
மாறும் பார்வை

நான்கு கண்களின்
கனவு பாதைகளாய்
காற்றில் பேசுகிறது ...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - 2018 சூலை மாத மின்னிதழ்

குழி விழுந்த கன்னம் வந்து குவிகிறது முத்த மழை பச்சிக்காத கடவுள் முன் பல வகையான நெய்வேத்தியம் ...