மூன்றெழுத்து பகுதி - 3

ஆட்சியில் அரங்கேறும் 
கட்சி மூன்றெழுத்து 

அக்கட்சியை நிர்ணயக்கும்
கள்ள ஓட்டு மூன்றெழுத்து 

கள்ள ஓட்டை கணக்கிடும் 
கணினி மூன்றெழுத்து 

கணினியின் முடிவில் வெளியாகும் 
வெற்றி மூன்றெழுத்து 

வெற்றியின் விளைவுகளே 
பணம் மூன்றெழுத்து 

பணத்தின் தொடக்கமே 
ஊழல் மூன்றெழுத்து 

ஊழலால் கடத்தும் 
அரிசி மூன்றெழுத்து 

இவ்வரிசியால் வாடும் 
ஏழ்மை மூன்றெழுத்து 

ஏழ்மையில் துடிக்கும் 
மனம் மூன்றெழுத்து 

மனத்தால் ஏங்கும்
தேடல் மூன்றெழுத்து 

இத்தேடலில் கண்ட 
மோசம் மூன்றெழுத்து 

அம் மோசத்தால் தொடரும்
நாசம் மூன்றெழுத்து 

நாசத்தில் நாறும் 
அழிவு மூன்றெழுத்து 

அவ்வழிவில் இறக்கும் 
சுனாமி மூன்றெழுத்து 

இந்த சுனாமியில் சேர்ந்த 
பினாமி மூன்றெழுத்து 

பினாமியால் கூடும் 
சொத்து மூன்றெழுத்து 

சொத்துக்களின் குவிப்பே 
மோகம் மூன்றெழுத்து 

மோகத்தால் அடையும் 
புகழ் மூன்றெழுத்து 

புகழின் ஆரம்பம் 
அநீதி மூன்றெழுத்து 

இந்த அநீதிியால் உருவாகும் 
வறுமை மூன்றெழுத்து

வறுமையை தொடும் 
கொடுமை மூன்றெழுத்து

கொடுமையால் சிதறும் 
சண்டை மூன்றெழுத்து

சண்டையால் வெடிக்கும் 
குண்டு மூன்றெழுத்து

குண்டில் வெளியிடும் 
செய்தி மூன்றெழுத்து

செய்தியால் பெருகும் உறவுகளின் 
எதிரி மூன்றெழுத்து

எதிரியால் தூண்டும் 
ஹவாலா மூன்றெழுத்து

ஹவாலாவால் அதிகரிக்கும் 
கடன் மூன்றெழுத்து.......!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...