மூன்றெழுத்து பகுதி - 4


கடனால் உயரும்
வட்டி மூன்றெழுத்து

வட்டியால் பெருகும்
குட்டி மூன்றெழுத்து

குட்டியால் மகிழும்
வங்கி மூன்றெழுத்து

வங்கியால் தொடரும்
வைப்பு மூன்றெழுத்து

வைப்பால் கூடும்
மீட்பு மூன்றெழுத்து

மீட்பில் ஒளிரும்
லாபம் மூன்றெழுத்து

லாபத்தால் சேரும்
கழிவு மூன்றெழுத்து

கழிவால் கரையும்
அளவு மூன்றெழுத்து

அளவால் அடையும்
பொறுமை மூன்றெழுத்து

பொறுமையால் உலவும்
பிரிவு மூன்றெழுத்து

பிரிவே ஞானத்தின்
முதல் மூன்றெழுத்து

முதலும் கடைசியுமாய்
விளங்கும் சிவன் மூன்றெழுத்து

சிவனின் பாதியாய் ஆட்சி
செய்யும் சக்தி மூன்றெழுத்து

அக்சக்தியும் சிவனும் சேர்ந்து
ஆளும் நம் தேசம் மூன்றெழுத்து,

இத்தேசத்தில் பொறித்த
ஈகரை மூன்றெழுத்து

ஈகரையை தந்த
கவிதை - க்கு மூன்றெழுத்து

இவைக்கெல்லாம் நன்றி கூறி
சென்று வரும் வருகை - க்கு மூன்றெழுத்து

இதை வடித்த விரலுக்கு
வாழ்க வாழ்க என்று கூறி
விடை பெறுகிறேன் .......!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...