மாற்றத்தால் மறுக்கிறேன்...!


உன் கொடியிடையை 

என் விழியிடை 

கண்டதால் விடைபெறுகிறேன் 

காதல் மாற்றத்தால் ....!


உன் குரலோலியை 

என் காதொலி

கேட்டதால் நடை பழகுகிறேன் 

தூரத்தின் மாற்றத்தால் ....!


உன் நடையழகு மேனியில் 

என் உயிரழகு 

நுழைந்ததால் மடையனனேன்

உடையவன் கூறிய மாற்றத்தால் ...!


பெண்ணே உன்னை 

தலை முதல் பாதம் வரை 

அலை அலையாய் கலைவடித்தேன் 

என் இதயக் கடலில் மூல்கி

முத்தெடுக்க வந்தால்போதும் 

நமது சேய்க்கும் தந்தையாய் மாறுகிறேன் ...!


திசையே என் வழியில் மிதக்கும் 

காதல் படகிற்கு கலங்கரை 

விளக்காய் திசை மாறாத 

விசைப்படகாய் மாறுகிறேன் ...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் - கார்த்திகை 2017

தெரு மூலையில் வாசம் வீசுகிறது அம்மாவின் கைப்பக்குவம்