காதல் இலக்கணம் ...!


ஆயுத எழுத்தாய் இருந்த
என்னுயிரில் காதல் எழுத்தாய்
எழுதுகிறேன் உன்னை

நீயும் நானும் சேருகையில்
பன்னிரு அறிவில் நம்விரு
உயிர்கள் கலந்து உயிர்மெய்யாய்
பிறந்த காதலை

கையிருசொந்தங்கள் கட்டிலிடுகையில்
மெய்யொரு உயிராய் பிறக்கும்
குழந்தையை சேர்த்து பதினெட்டாம்
உயிரில் வெற்றி நடை போடுகிறது
உயிர் மெய்யாய் காதலாய்
தமிழ் மொழி பிறப்பில் ...!

2 comments:

 1. நல்ல சிந்தனை வரிகள்...
  எப்படித்தான் ஒரே நாளில் இத்தனை கவிதைகள் எழுதுவதை நினைத்து வியப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு