முதுமையில்லாப் பறவைகள் ...!


தொடு வானமாய் பறந்தேன்
உன்னை தொடாமலே
சிறகொடிந்த பறவையாய்
மரங்களின் சரணாலயத்தில்
அடிமையானேன்

கொடுமையான மனிதர்களை
கண்டு அடிமைப்பட்ட சிறகால்
விரைகிறேன் விருந்தோம்பலை நாடி

நம் பறந்து விரிந்த உலகில்
நடந்து செல்லும் குழந்தையும்
விரைந்து பார்க்கும் பறவையாய்
கரைந்து திரிந்து வாழ்கிறேன்
கடமைகளை முடிக்கவே

உடமை எல்லாம் இழந்துமே
மடமை உள்ள மக்களை
முழுமையாக திருத்தவே
பழமையுடன் திரிகிறேன்
முதுமையில்லாப் பிறப்பிலே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 49

நாவால் சுட்டுவிட்டு முத்தத்தால் அணைத்தாலும் மறையவில்லை வடு