| மனதில் வீசும் கற்றும் |
| மறையும் முன் எத்தனை |
| சருகுகள் இங்கே |
| கண்ணீர் சிந்துகிறது... |
| தாய் பாலை சுவைத்த நாக்கு |
| தமிழ் பாலை சுவைக்கும் போதும் |
| மொழிப்பால் கொண்ட தேசத்தில் |
| விழிப்பால் பிதுங்க நிற்கும் |
| தாய்கள் எத்தனை |
| அகர முதல கற்கும் முன் |
| ஆங்கிலம் பேசுகிற பிள்ளை |
| அகில மோகத்தில் |
| ஆல்கஹாலுக்கு அடிமையாகும் |
| இளைய சமுதாயம் எத்தனை |
| அரும்பு மீசை இரும்புப் பார்வை |
| கரும்புபோல் இனிக்கும் காதலில் விழுந்து |
| எறும்பாகி துரும்பாகி துளிர் இதயங்கள் |
| ஏறுவரிசையில் கூடும் |
| காதலர்கள் எத்தனை |
| உடைந்த முட்டையாய் நாறும் நாற்றத்தில் |
| உலாவரும் இதயங்கள் |
| ஒரு மணி காசுக்கு பலமணி வேசியாய் |
| பகலிரவு காணாமல் முதலிரவு தேசத்தில் |
| முடங்கிக் கிடப்பவை எத்தனை |
| அல்லா ஏசு ஹிந்து அகிம்சை வாசிகள் |
| தீவிரவாதத்தால் தீயிக்கு இரையாகி |
| பேயிக்கும் பெரும் நஷ்டம் என்ற |
| பெயரில் துளிர்விடும் |
| மதக் கலவரங்கள் எத்தனை... |
| பாழாப்போன உலகத்தில் |
| பணமே பிணமாய் மாறிவரும் போது |
| குணமும் கோவிலும் எதற்கு |
| இங்கே கொண்டு வந்து குவியுங்கள் |
| ஊழல் பணத்தை |
| என்று கோசமிடும் கட்சிகள் எத்தனை |
| அத்தனையும் ஓர் நாள் சருகாகும் |
| இங்கே அமைதி மட்டுமே கேள்வியாகும் |
| ஒற்றுமையில்லா தேசத்தில் |
| யாவரும் உடலும் ஓர் நாள் சருகாகும் |
சருகு(கள்)
Labels:
சருகுகள் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
வாயில்லா ஜீவராசிக்கு வாழக் கற்றுத்தந்தது சருகுகள்...! இறந்தகாலத்தில் உரமான...

http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_12.html
ReplyDeleteதங்களின் இந்த பகிர்வை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். வருகை தரவும்.
உங்களின் நம்பிக்கை பிடித்திருக்கிறது.
ReplyDeleteஅடிக்கடி உங்களின் கவிதைகளை வாசிப்பதில் ஒரு சந்தோஷம் ஹீஷாலீ!
பாராட்டுகள்!
வலைச்சர அறிமுகத்திற்கு இன்னொரு சிறப்புப் பாராட்டு!
வலைச்சர அறிமுகத்தில் இன்று நீங்கள் சகோ!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
வணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-