சென்ரியுவாய்த் திருக்குறள்-246-250

குறள் 246:
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி 
அல்லவை செய்தொழுகு வார்.


ஏகபோக வாழ்க்கையில் 
போலிச் சாமியார் 
இறுதிச் சடங்கு புழல்

குறள் 247:
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு 
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

இல்லறம் துறவறம் 
இன்பம் பெற 
கருணைப் பொருள் தேடு 

குறள் 248:
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் 
அற்றார்மற் றாதல் அரிது.

ஏழை பணக்காரன் 
வாழ்க்கை ஏணி 
அருள் இழந்தால் உயிர் தீனி  

குறள் 249:
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் 
அருளாதான் செய்யும் அறம்.

புத்தக அறிவு 
போலியானது 
ஞானமில்லா அருளால் 

குறள் 250:
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் 
மெலியார்மேல் செல்லு மிடத்து.

வாயற்றவனை வதைத்து 
பாம்பிடம் அஞ்சியது 
தவளை...! 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145