சென்ரியுவாய்த் திருக்குறள்-226-230

குறள் 226:
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள்வைப் புழி.


கரும்பாய் பசி தீர்த்து
  எறும்பாய் சேமிப்பது 
பிறவி கருவூலம் 

குறள் 227:
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் 
தீப்பிணி தீண்டல் அரிது.

காக்கைபோல் 
சேர்கையோடு உண்பவன் 
பசி நோய் அணுகாது 

குறள் 228:
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை 
வைத்திழக்கும் வன்க ணவர்.

கொடுக்கும் இன்பம் 
கெடுக்கும் மனம் 
அறியாது 

குறள் 229:
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய 
தாமே தமியர் உணல்.

பெருக்கிய பொருளை 
பகிராமல் உண்பது 
பிச்சையை விட கொடியது 

குறள் 230:
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் 
ஈதல் இயையாக் கடை.


ஈயா மன துயரத்தை
வென்றது 
சாதல்...! 



No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145