சென்ரியுவாய்த் திருக்குறள்-231-235

குறள் 231:
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது 
ஊதியம் இல்லை உயிர்க்கு.



கொடைத் தன்மை
குன்றாத புகழ்
மனிதனின் நோக்கம் 

குறள் 232:
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று 
ஈவார்மேல் நிற்கும் புகழ்.

உண்மையான புகழ் 
வரியவருகும் 
வாரி வழங்குதல் 

குறள் 233:
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் 
பொன்றாது நிற்பதொன் றில்.

மனிதனின் 
அழியா புகழ் 
தான தருமங்கள் 

குறள் 234:
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் 
போற்றாது புத்தேள் உலகு.

நெடும்புகழ் ஆற்றினால் 
தேவரை விட 
தெய்வமானவன் 

குறள் 235:
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் 
வித்தகர்க் கல்லால் அரிது.

இறந்தும் இறவா
புகழுடன் வாழ்வதே 
சிறப்பு

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145