சென்ரியுவாய்த் திருக்குறள்-171-180


குறள் 171:
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் 
குற்றமும் ஆங்கே தரும்.
உழைக்கா செல்வத்தை 
உரிமை கொள்பவன் 
குடும்பம் அழியும்
குறள் 172:
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் 
நடுவன்மை நாணு பவர்.
ஒன்றை இழந்தால் 
இரண்டு போகுமென்பவர் 
நீதிக்கு அஞ்சுபவர்
குறள் 173:
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே 
மற்றின்பம் வேண்டு பவர்.
அகிலத்தின் 
பேரின்பம் 
அறநெறி இன்பம் 
குறள் 174:
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற 
புன்மையில் காட்சி யவர்.
வறுமையிலும் 
திருடி வாழதவர் 
பேர் அறிஞர்
குறள் 175:
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் 
வெஃகி வெறிய செயின்.
பட்டம் படித்தவன் 
பகல் கொள்ளை 
பயனில்லா நூலறிவு 
குறள் 176:
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் 
பொல்லாத சூழக் கெடும்.
காசுக்கா  அருளை விரும்பியவன் 
கம்பி எண்ணுவான் 
புழல் சிறையில் 
குறள் 177:
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் 
மாண்டற் கரிதாம் பயன்.
நண்பனின் காதலியை 
மனைவியாக்க துடிப்பவன் 
வாழ்க்கை நலம் தராது 
குறள் 178:
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை 
வேண்டும் பிறன்கைப் பொருள்.
செல்வம் மென்மேலும் வளர
பிறர் கைப்பொருளை
விரும்பாதே 
குறள் 179:
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் 
திறன்அறிந் தாங்கே திரு.
பிறர் பொருள் கவரதவனிடம் 
திருமகள் 
குடி புகுந்தால் 
குறள் 180:
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் 
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
அடுத்தவர் பொருளை 
விரும்பா இதயத்துக்கு  
வெற்றி தோல்வி துசி 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...