சென்ரியுவாய்த் திருக்குறள்-161-170


குறள் 161:
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து 
அழுக்காறு இலாத இயல்பு.
நாளைய உலகை வென்று 
தணிக்கும் 
நல்ல பொறாமை 
குறள் 162:
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் 
அழுக்காற்றின் அன்மை பெறின்.
பொறாமை இல்லா
மனிதப் பண்பு 
சிறந்த பேர் 
குறள் 163:
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் 
பேணாது அழுக்கறுப் பான்.
பகைவனின் புகழை
இனிதன  பாராட்டியவன் 
இறந்த நண்பன் 
குறள் 164:
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் 
ஏதம் படுபாக்கு அறிந்து.
அறிவுடையோர் 
கருத்து 
தீய வழி அழிவு வழி 
குறள் 165:
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் 
வழுக்காயும் கேடீன் பது.
வீழ்த்துவதும்   
தாழ்த்துவது 
பொறாமை குணமே 
குறள் 166:
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் 
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
பிச்சை தடுத்தவன் 
ஆடை இழந்த  
விரத வாழ்க்கை 
குறள் 167:
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் 
தவ்வையைக் காட்டி விடும்.
சீதேவி தங்கை போய் 
முதேவி அக்க வருவாள் 
பிறர் புகழை வெறுப்பவன் 
குறள் 168:
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் 
தீயுழி உய்த்து விடும்.
கோடிச் செல்வத்தை 
எரித்துவிட்டது 
பொறாமை தீகுச்சி 
குறள் 169:
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் 
கேடும் நினைக்கப் படும்.
வளமும் வேதனையும்   
குணத் தாராசின் 
முள் 
குறள் 170:
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் 
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
இமயம் போல் உயர்த்தி 
சுனாமில் போல் வீழ்த்திவிடும் 
பொறாமை 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - 2018 சூலை மாத மின்னிதழ்

குழி விழுந்த கன்னம் வந்து குவிகிறது முத்த மழை பச்சிக்காத கடவுள் முன் பல வகையான நெய்வேத்தியம் ...