சென்ரியுவாய்த் திருக்குறள்-181-190


குறள் 181:
அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது.
துன்ப கண்ணீரை துறககும் 
இன்ப தாழ்பாள்
புறம் பேசா பண்பு 
குறள் 182:
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே 
புறனழீஇப் பொய்த்து நகை.
நேரில் சிர்த்தவனை 
புறம் குத்துவது 
மனிதக்கேடு 
குறள் 183:
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் 
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
கண்ட இடத்தில் புகழுதல்
காணா இடத்தில் பழித்தல் 
இறந்த இதம் 
குறள் 184:
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க 
முன்னின்று பின்நோக்காச் சொல்.
நேருக்கு நேர் 
திட்டுவது குறையல்ல 
பின் குறை கூறுவது தவறு.
குறள் 185:
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் 
புன்மையாற் காணப் படும்.
அறவழி பயணத்தில் 
சிருமையாவன் 
புறம் பேசும் இழியவன் 
குறள் 186:
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் 
திறன்தெரிந்து கூறப் படும்.
இவன் குறை அவன் பேச 
அவன்  குறை  இவன் பேச 
தவளை தன் வாயால் கெடும் 
குறள் 187:
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி 
நட்பாடல் தேற்றா தவர்.
நட்பை வளர்க்கத் 
தெரியாதவர் நட்பு 
நாக பாம்பிற்கு சமம் 
குறள் 188:
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் 
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
உயிர் நண்பனின் குறையை 
புறம் பேசி திரிந்தவன் 
அடுத்தவரை மேடைபோட்டு பேசுவான் 
குறள் 189:
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் 
புன்சொல் உரைப்பான் பொறை.
இழி சொல் பேசுபவனின் 
உடல் பாவத்தை 
இப்பூமி சுமப்பது அறம் 
குறள் 190:
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் 
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
நிம்மதியான வாழ்க்கை வாழ 
பிறர் குற்றத்தை
தம் குற்றமாக போற்றுக 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145