ஹிஷாலீ ஹைக்கூ - 15


ஆகாய வானில் 
அவள் ஒரு தொடர்கதை 
வெண்ணிலா ...

காற்றில்
மிதக்கும் வாசம் 
கல்லறைப் பூக்கள் 

வறண்டு கிடக்கும் பூமி
எதன்மீது அமரும்?
கல்லறை...!
இறைவனின் தூக்கத்தில் 
இதயமற்ற உயிர்கள் 
அறை நிலாக்கள்...! 
இரு நிழல்கள் 
நிஜமாகிறது 
தலைமுறை பந்தம்...!
பிறப்புகள் 
இறப்புகள் 
விதியின் அளவுகோல்...!
வாழ்க்கை
நாடகம்
அனைவரும் பிரம்மாக்கள்…!
புன்னகை 
ஒளிந்துகிடக்கிறது 
பணத்தின் கீழ்...!
சுதந்திரம் 
மறைந்திருக்கிறது 
அரசியலின் கீழ்...!
தாடிக்குள்
எத்தனை கேடிகள் 
நேத்திகடன்..!
தினம் தினம் 
சுருங்குகிறது இதயம் 
பௌர்ணமி திங்கள்...!
கடல் நீர் 
அமிழ்தமானது
காற்றின் தாலாட்டில்...!
வண்டுகள் 
வாழ்க்கை 
இறவா மலர்கள்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

உயிர்த்திசை

விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான்  விடியலை தந்தவள் நீயல்லவோ  தாயே  படைத்தவன் துணையில் எனை வளர்க்க  பத்துப்பா...