ஹிஷாலீ ஹைக்கூ - 14


மானத்தின் 
பொது சொத்து 
பஞ்சு கஞ்சி...!
புகைபிடிக்காதீர் 
மது அருந்தாதீர் 
கேள்வியில்லா விடை 
வாணிப காதல் 
அலைவரிசையில் 
மெரினா ...!
ஆதாம் முதுகெலும்பு 
ஏவாள் நன்றிக் கடன் 
கருவறை ....!
மதித்தல் நன்று 
மிதித்தல் நன்றல்லது 
புகழின் உச்சி...!
வெள்ளை மாளிகை 
கருப்பு விளக்கு 
இருட்டில் நீதி ...!
எண்ணற்ற உயிர்கள் 
சல சமாதி
சுனாமி தானே புயல் ...!
மக்கள் 
மாக்கள் 
இன்றைய அரசியல் ...!
விரும்பாத கல்லறை
உயிர்த்தெழுதல்
சாம்பவான்கள் 
விதியை 
வென்றது பணம் 
ஜெனனம் மரணம் 
பாமரரின் 
பசிய உருஞ்சும் கொசு 
மருத்துவர் 
பத்துபாத்திரம் 
பழைய சோறு 
முதலாளி ஆதிக்கம் 
ஓரணா 
உலகையே அழைக்கும் 
விவாத புகை படம் 
அவசர தேவை 
ஆபாசமாக 
அறிவியல் மாற்றம் 
திருடவில்லை 
திருடிவிட்டேன் 
கற்பனை 
அதிகம் விரும்பாத 
ஆயுள் தண்டனை 
காதல் தோல்வி 
திருவோடு 
சிரிக்கும் சில்லறைகள் 
சிக்னல் வாகனம் 
கரை வேட்டிகள் 
கழுவாத பாவம் 
ஊழல் மன்னர்கள் 
வழிகள் நூறு 
வாழத் தெரியா மக்கள் 
வேடந்தாங்கலாய் 
சுற்றம் 
மறைத்த சுவர்கள் 
நல் சுமைதாங்கி 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...