ஹிஷாலீ ஹைக்கூ - 4

மா கோலங்கள் 
மண்ணுயிருக்கும் உணவாய் 
மனிதாபிமானம்‌ ........!
சுட்ட நிலவில் கூட 
வடை சுடும் பாட்டி தீயில்லாமல் 
பொய்மையிலும் நன்மை 
பழகிய உயிர் பாரமில்லை 
பயணத்தில் நசுங்கியது 
ஆறைவிட ஐந்திற்கு பரிதாபம் 
நரம்பு தெரியா எறும்புகள் 
கடித்ததும் வலிக்கிறது 
சிறு துரும்பும் ஆயுதமாய்
பதினைந்து நாடுகள் ஒற்றுமை
பண்டமாற்று முறையில் .....
கைக்குள் அடக்கம்!
இரவு பகல் கடந்தாலும் 
உறங்கவில்லை 
இதயம் ....!
அழிவதில்லை காதல் 
காதலர்கள் அழிந்துவிடுகிறார்கள் 
மாற்றுத் திறனாளியில் இதயம்
உதிரத்தில் ஓட்டா உறவுகள் 
சரிரத்தில் ஒட்டுகிறது 
இரத்த தானம் ...!
அயல் நாடும் 
அடைக்கலம் ஊழலில் 
மனிதனில் குரங்கு!
நாட்டை வளர்த்தாலும் 
சமுதாய சீர்கேடில்
குடியைக் கெடுக்கும் குடிப்பணம் !
அசையும் நாற்காலியில் 
அசையா சொத்துக்களின் 
பதவிப்பிரமாணம் ஐந்தாண்டு திட்டம்
மாற்றான் தோட்டத்து கல்வி 
தாயின் கருவறை பாடமாய் 
ஆங்கில மோகம்!
நொடியில் மரணம் 
தூண்டிலிட்டவனுக்கு உணவாய் 
தீமையிலும் நன்மை

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)