ஹிஷாலீ ஹைக்கூ - 3

 எண்ணற்ற தொகுதிகள்  
 ஏலம் போகிறது  
 பொது உடமையில் தனி உடமை   
ஏறுவரிசையில் கல்வி
இறங்குவரிசையில் அரசு வேலை 
வாயிதாவில் மறு பதிவு 
மனத்தால் வரையாத ஓவியம் 
உனதால் வரைகிறேன் என் 
கருவறையில் ....!
எழுதாத வாசகம் 
எழுதுகிறது மண்ணில் 
கண் தானம் ....!
குடி குடியை கெடுக்கும் 
நன்மையில்லா சமுதாயச் சீர்கேடு
குடி பணம் நாட்டை வளர்க்கும்
காதலை சொல்லும் ரோஜாக்கள் 
கண்ணீர் சிந்தியது 
வாடிய இதழில் வைரங்கள்
குடைக்காக ஏங்கும் மழை 
பொழிந்தும் நனையவில்லை 
கைபிடி இல்லா கார் மேகம்‌
குனியாத புருவமும் 
கொடுக்காத கைகளும் 
நல்ல வாழ்ந்ததா சரித்திரமில்லை 
சிலைக்கு ஒளிகாட்டும் மனிதன் 
மனச்சிறைக்கு வழிகாட்ட 
லஞ்சம் வாங்குகிறான் 
பாயும் வாகனத்தில் 
தூய காற்றும் துயரப்படுகிறது 
கண்ணுள்ள மனிதனால்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...