காந்தி மகா காந்தி ...!

காந்தி மகா காந்தி காந்தி மகா காந்தி
ஊழல் மிகுந்த நாட்டினிலே
ஊமையாய் சிரிக்கிறார் காந்தி -நாளைய
உலகமே பாடம் சொல்ல
அகிம்சையில் திருத்துவார் காந்தி

திராவிடம் பேசும் நாட்டினிலே
தியாகியாய் வாழ்ந்தவர் காந்தி -இன்று
யோகியைப் போல் மாலைசூடும்
மக்களுக்கோர் சரித்திரமாக இருப்பவர் காந்தி

அறவழி கண்ட நாட்டினிலே
ஆடை பாதியாய் அலைந்தவர் காந்தி - நாளைய
ஆயுதமேந்திய புரட்சியினர் முன்
பொல்லூன்றிய புரட்சியர் அண்ணல் காந்தி

மது வேண்டுமென்ற நாட்டினிலே
மாதுவை மதி என்றவர் காந்தி - இன்றும்
மீளாத விவசாயின் தற்கொலையில்
விடியலைத் தேடும் உத்தமர் காந்தி

மதயானையாய் தலைவிரித்தாடும் நாட்டினிலே
மதக்கலவரத்தை அறவே ஒழித்தவர் காந்தி - மனிதம்
கத்தியெடுக்கும் வன்முறைக் கலாச்சாரத்தால்
காகிதமாய் கசங்கிபுழங்குகிறார் காந்தி

சுதந்திரம் வாங்கிய நாட்டினிலே
வறுமையைகண்டு மெலிந்தவராம் காந்தி - இன்று
புனிதத்தைக் கூட போலியென புறம் தள்ளும்
போராளியின் முன் வாய்மையை வென்றவர் காந்தி

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...