வீடற்ற வாழ்வு!

Image result for வீடற்ற வாழ்வு!

வானமே கதவுகளாக
வாழ்க்கையே கோயிலாக 
வாழ்ந்து கழிக்கிறோம் 
சாலையோரத்தில் !
நிலா வெளிச்சத்தில்
நீர் கோர்த்த மண் சுவற்றை 
தாங்கி பிடிகும் 
தார்பாய் வேயப்பட்ட 
கூரை வீடுகளே எங்கள் சாபம்
பிளாஸ்டிக் குப்பைக்குள்
குடும்பம் நடத்தும் 
கொசுக்கள் மத்தியில் 
குழ்ந்தைகளாக மாறுவதே எங்கள் சோகம் 
சுள்ளென்று அடித்த வெயில் 
வெந்து புழுங்கும்
பச்சிழம் குழந்தையின்
கண்ணீர் கடலைக் கடக்க
போராடுவதே எங்கள் வேட்க்கை
பறந்து விரிந்த ஊரில்
திறந்தவெளி கழிவறைக்குள்
திடிரென சத்தமிடும் ரயில் வண்டியில் 
தடம் புரண்ட உயிரை 
தலைமறைவாக புதைத்த கதைக்கு 
முடிவுரை எழுதுவதே எங்கள் நோக்கம்

1 comment:

  1. Anonymous8:29:00 PM

    QQLiga.com Situs Bandar Taruhan Agen Judi Bola Terbesar Indonesia

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சாதி !

ஒண்ணா சோறு தின்று உதட்டையும் பரிமாறிக்கொண்டாய் கண்ணா பின்னாவென்று காசையும் செலவு செய்துவிட்டாய் எல்லாம் ஒன்றென்று ஈருடல் ஓருயிர் ...