ஹைக்கூக்கள்

அடக்க விலையையே   
மிஞ்சிவிட்டது 
ஆடம்பர விலை !
தேர்வாகாத நாள் காட்டி 
தேர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கிறது 
காலம் ...!
மலடியின் வெளிச்சம் 
ஒளிந்திருக்கிறது 
அனாதை இல்லத்தில் !
சட்டமன்றத் தேர்தல் 
பாஞ்சாலியை தேடும் 
கிருஷ்ண பரமார்த்மா !
தொட்டில் குழந்தையை 
மறந்து கோயில் கோயிலாக 
ஏறி இறங்கும் தாய் !
எந்த அலையின் பிரசவமோ 
கரை ஒதுங்கியது 
சிற்பிகள் !
தானாகவே சரியாகிறது
எதிரே நிற்கும்போது
கண்ணாடியில் முகம் ...!
நள்ளிரவு மழை 
நச்சத்திரங்களை தேடும் 
நிலா ...!
நீர் கோழி 
ஜலதோசத்தோடு 
புகைப்படக் கலைஞன்  ....!
மொட்டை மாடி 
விடியலுக்கு காத்திருக்கும் 
மொட்டை நிலவு  ...!

2 comments:

  1. சிறப்பான ஹைக்கூக்கள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

அக்டோபர் - கொலுசு -2018

நீண்ட இரவு குறுகிய வட்டத்திற்குள் ஏழையின் கனவு பனி மூட்டம் மெல்ல கலைகிறது வானத்து ஒவி...