விடை பெறுகிறேன் ...!நினைவை விட்டு 
தூக்கியெறிந்த பின்னும்
கனவை வைத்து சுமக்குகிறேன்
திறந்தது காதல் கதவு 
உள்ளே புகுந்ததும் 
புத்தி பேதலித்து தேடினேன்
எனை மறந்த போதும் 
வேறொன்றை தேடிப் போனாயோ
என்ற ஆதங்கம் 
என்னை 
ஆழமாக தேடு என்றதும் 
தவறை மறந்து தேடினேன்
எவளோ ஓருத்திக்கு 
லைக் போட்டதும்
கொதித்தெழுந்து சண்டையிட்டேன்
எனக்குள்ளே 
சமாதனப்படுத்தியது 
இவன் வேற மாதிரியோ என்று 
விழித்துக்கொண்டேன்
விதியை மிஞ்சிய உறவு 
இவ்வுலகில் 
வேறொன்றும் இல்லை என 
விடை பெறுகிறேன் 
காதலிலிருந்து ...!

4 comments:

 1. அருமை! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 2. கவிதை அருமை... வாழ்த்துக்கள்.

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

படைப்பு வளம் - வசீகரன்

சில ஹைகூக்கள் ஒரு பார்வை: அக்டோபர் - 2018 படைப்பு வளம் - வசீகரன் தமிழில் ஹைக்கூ படைப்பாளன் பரந்து ...