எதிர் நீச்சல் நீ போட…!



இந்த வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெற்றிருப்பவரை அடுத்துச் சந்திப்போம்!
இன்மையாலும் (வறுமை), கணவன் மற்றும் குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் இன்மையாலும், இப்புவியில் எத்தனையோ மங்கையர் உண்ண உணவின்றி, வாழ வழியின்றித் தம் வாழ்க்கையெனும் ஓடத்தை எதிர்நீச்சல் போட்டே செலுத்துகின்றனர். இதற்கிடையில், தம் குழந்தைகளைப் படிக்கவைத்து ஆளாக்க அவர்கள் படும்பாடோ வார்த்தைகளால் விவரிக்க இயலாத துயர காவியங்கள்!
மிடிமை தன்னை அடிமைசெய்து வாட்டிவதைக்கின்ற போதினும், கோழையைப்போல் தன் மகளுக்குக் கள்ளிப்பால் ஊட்டாத ஏழைத்தாயை நம் கண்முன் நிறுத்தும் கவிதை நம்நெஞ்சைக் கனக்கச்செய்கிறது.
வறுமை வாக்கரசி போட 
சொந்த ஊரை விட்டு
சொப்பனம் தேடி வந்தேன் 
அப்பன் ஆத்தாளை மறந்து
அடுக்குமாடி கட்டிடத்தில்
அயராது உழைத்தேன் 
இருக்க மனையில்லை
இல்லறம் சுகமில்லை 

பறக்கும் காகம் போல்
கண்ட இடத்தில்
உண்டு உறங்கி
உயிர் வாழும் எனக்கு …
சிம்ம சொப்பனமாய்ச்
சீமாட்டி நீ தரிக்க
பெண்மையை உணர்ந்து 

பேறுகாலம் பெற்றேன் 
கள்ளி அறியாத்
தாய்ப் பாலை
சொல்லிச்  சொல்லி
கொடுத்தேன் என்
கட்டிச் செல்வமே 
நான் கட்டையில்
போகும் வரை 

உன் கடன் தீராதடி
முத்துச் செல்வமே
முழுமதியே 
இந்தச் சொத்தைத் தவிர
வேறில்லையே
இந்த உலகில்
எழுந்து விளையாடு
எதிர் நீச்சல் நீ போட…!
பொன்னும் பொருளும் இல்லையென்று கலங்காது, பெற்ற குழந்தையையே பெறற்கரும் சொத்தாக நினைந்துபோற்றும் அன்னையின் உள்ளத்தைத் திறந்துகாட்டியிருக்கும் திருமிகு. ஹிஷாலியைஇவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிக்கின்றேன்.
(http://www.vallamai.com/?p=68490)

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145