சிறுகதை, !

ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் நீ வருங்க காலத்தில் என்னவாக போறாய் என்று வினாவினார் அதற்கு ஒவ்வொருவரும் நான் ஆசிரியராக போறேன் IAS படிக்கபோறேன் டாக்டராக போறேன் இஞ்சினியராகப் போறேன் வக்கீலாகப் போறேன் என்று சொல்லிக்கொண்டே வந்தனர் அப்போது ஒரு மாணவி மட்டும் நான் தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரியாகப் போறேன் (TNPSC) என்றதும் ஆசிரியர் வியந்தார் அந்த பெண்ணை அழைத்து உனது வித்தியாசமான சிந்தனைக்கு கரணம் என்ன என்று கூறலாமா ? என்றார்

ம்ம்ம் கூறுகிறேன் டீச்சர் எந்த tnpsc exam வந்தாலும் சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பிக்கிரார்கள் இதில்18 வயது முதல் 40 வயது வரை exam எழுதலாம் என்று வரைமுறை இருக்கிறது அதில் நிச்சயம் வயது அதிகமானவர்கள் தேர்வாக மாட்டார்கள் அப்படியே தேர்வானாலும் பணம் கொடுத்து பதவியை முன்னவே தேர்வு செய்யப்பட்டிருக்கும் அப்படி பார்த்தால் இதெல்லாம் ஒரு கண் தொடைப்பு மாதிரி தான் என்று மக்களுக்கும் தெரியும் அரசுக்கும் தெரியும் இருந்தும் இதில் அரசுக்கு கிடைக்கும் வருமானம் சுமார் .... 10 லட்சம் மக்கள் x ரூ 150 அல்லது ரூ 50 வைத்துகொள்வோம் இப்படியே போனால் சுமார் 22 ஆண்டுகள் அரசுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு ? இப்ப நினைச்சாலே கண்ணக் கட்டுது டீச்சர் 
இதை மாற்றி அமைப்பதே எனது குறிக்கோள் 

எப்படி 

சுருக்கமாகக் கூறுகிறேன் டீச்சர்
18 வயது முதல் 25 வயதுவரை உள்ளவர்களுக்கு exam தனியாகவும் 26 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு தனி exam மும் இரண்டிற்கும் விண்ணப்பிக்க ஒரு குறிப்பிட எண்ணிக்கை படிவம் மட்டுமே என்று கூறினால் அனைவரும் பயன் பெறுவார்களே

இது சாத்தியமாகுமா ? 

மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று சொல்லியே விற்பனை செய்வது சாத்தியமாகும் போது இது சாத்தியமாகாத டீச்சர் ?

வகுப்பே கை தட்டி ஆரவாரம் செய்தார்கள் ....

2 comments:

 1. வணக்கம்
  மாணவியின் சிந்தனை வித்தியாசம் புதிய புதிய சிந்தனைகள் நல்ல திறவுகோல்.. கதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் பயமாக தான் உள்ளது இப்படி எழுதுவதற்கு இருந்தும் பதிவிட்டுவிட்டேன்.

   தங்கள் கருத்துக் கண்டு மகிழ்ந்தேன் இன்னும் நிறைய எழுதலாம் என்ற ஆர்வர் எனக்குள் வந்துவிட்டது நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

அக்டோபர் - கொலுசு -2018

நீண்ட இரவு குறுகிய வட்டத்திற்குள் ஏழையின் கனவு பனி மூட்டம் மெல்ல கலைகிறது வானத்து ஒவி...