மூவுலகையும் ஸ்தம்பிக்க வைத்த மாமனிதனே கலாம் ...!
|
|
ராமேஸ்வரத்தின் |
ராணுவ வீரனே |
"கலாம்" |
தனது முழு பெயரில் |
"மூன்று" மெய்யெழுத்துடன் |
பயணம் செய்யும் |
எண் கணித |
வாழ்க்கை வரலாறு இதோ... |
(அப்துல் கலாம் ) |
வயதைக் கடிந்தேன் |
கூட்டிக் கழித்துச் |
சொன்னது மூன்று |
(2015-1931=84 |
8+4=12 |
1+2=3) |
வாழ் நாள் சரித்திரத்தை |
வரலாறாக்க |
முயற்சித்தப் போது |
சுய சரிதம் கழிந்தது மூன்று |
1931=14=5 , |
2015=8 |
8-5 = 3 |
மதத்தின் குறியீட்டை |
இஷ்டப்படு கூட்டிக் கூட்டிப் |
பார்த்த போது மீண்டும் |
துளிர்த்தது அதே மூன்று |
(7+8+6=21 |
2+1=3) |
தேதி ஆராய்ச்சியில் |
ஜோதி ஏற்றி வழிபட உன் |
நினைவு நாளை |
கூட்டிக் கழித்தபோது |
வாசலில் நின்றது மூன்று |
(OCT 15 = 6, |
JUL 27 = 9 |
9-6 = 3) |
இயற்கை எய்தி |
செயற்கை மொழி கொண்டு |
இமயத்தையே சரியவைத்த |
தவ நாட்கள் மூன்று |
(Jul 27- Jul 30) |
ராணுவ மரியாதையில் |
ராமேஸ்வரமே நடுநடுங்க |
நினைவுக் கல் ஏற்றி |
நல்லடக்கம் நடந்த நாள் |
30 என்றாலும் |
முன் நிற்பது மூன்று |
( jul 30 ) |
உலகத் தலைவர்கள் |
ஒன்று கூடி |
உம் பாதம் வணங்க |
ராணுவ சத்தத்தில் |
கூட்டி முடிந்தது மூன்று |
(21 குண்டுகள் முழங்க ) |
மிச்சமிருக்கும் |
பிறந்த நாளை வரவேற்று |
இனிப்பூட்ட |
மாதம் மூன்றிருக்க |
முடிவுரை எழுதிய |
கலாமே ...
|
இதைத் தவிர்த்து இன்னும் |
மூன்றைத் தொடர்கிறேன் |
உன் திருவாயில் |
மொழிந்த மொழிகள் மூன்று |
(T+E+H) |
வாதித்த "கடமை" மூன்று |
நீ கண்ட "சோதனை" மூன்று |
அதில் |
வெடித்துச் சிதறிய |
"சாதனை" மூன்று |
"வேதனை" மூன்று |
விண்வெளியில் |
பெயரிட்ட SLV-3 rocket - மூன்று |
"வேதம்" மூன்று |
விடியலைக் கூவும் |
உன் "கவிதை" மூன்று |
அகிலமே விடுப்பளித்து |
அமைதிப் பூ மனம் வீசிய |
மண்ணில் வித்தான |
உன்னை |
வாழ்த்தவிருக்கும் இனி |
காலம் "மூன்று " |
சுயலாபம் அறுத்து |
ஞானம் பெற்ற மூன்றின் |
நாயகனே உனக்காக |
அகிலமே |
அகல் தீபம் ஏற்றிக் |
கைகூப்பும் ஆஞ்சநேயனே |
அக்னி சிறகு கொண்டு |
என்றென்றும் சிரஞ்சீவியாகச் |
சிறக்க வாராயோ ...!
|
|
(மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்
உள்ளம் என்று ஒரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பெயர் இருக்கும்
கலாம் அது கலாம் கலாம் அது கலாம் )
( குறிப்பு :- கலாமின் பிறப்பு முதல் இறப்புவரை நடந்த நிகழ்வுகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்துக் கிடைத்தது மூன்று அதையே கருவாக வைத்து எழுதியுள்ளேன் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் இப்படிக்கு ஹிஷாலி )
ரொம்ப அருமையா இருக்கு.
ReplyDeleteஅறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?
ReplyDeletehttp://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html
புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!
http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html