ஹிஷாலியின் ஹைக்கூ ...!



ஒரு மனதாய் 
தேர்ந்தெடுத்தனர் 
மோதிரவிரல் ...!
எந்த நூற்றாண்டின் 
கண்ணீரோ 
உப்புகரிக்கிறது கடல் ...!
திசைக்கு ஒரு ஜாதி 
வழிகாட்டியது 
தபால் காரனுக்கு 
என்றும் பழைய ஆறு 
புதுப்பொலிவுடன் 
அரசியல்வாதி ...!
முத்தான தமிழ் 
வெட்கப்பட்டுகிடக்கிறது 
சிப்பிக்குள் ...!
ஆங்காங்கே தெரிகிறது 
வறுமைக் கோடு 
வரைபடத்தில் ...!
அழுகையை தவிர 
சிலுவை
நிலுவையில்  உள்ளது ...!
யாருக்கு கும்பாபிஷேகம்
நைவேத்தியம் செய்கிறது 
மழை ...!
சிறு விதை 
பெரிய வரலாறு படைத்தது 
இறங்குவரிசையில் ...!
என்ன சாதியே மதமோ
கணக்கெடுப்பு செய்கிறது 
காலம் ...!
வெயில் காயிது 
மையில் இறகாய் 
அவள் ...!
எங்கிருந்தோ எரிக்கிறான் 
உருகுகிறேன் 
மெழுகாய் ...!
ஆடும் கிளைகள்  
அசையமருப்பதில்லை 
கிளையறிந்து ...!
கிழே விழுந்த சூரியன் 
மேலே எழும்பி 
ஓடியது கிழே ...!
திராவிட வேதம் 
மாறி படிக்கிறது 
குருகுலத்தில் ...!
மனக்காத செடியில் 
எத்தனை மணக்கும் 
மலர்கள் ...!
உடலை வருத்தும் 
வேண்டுதல் தேற்றியது 
பலி ஆடு 
தாய் பாலை மறந்த 
வண்டுக்கு பாடம் கற்பித்தது 
தேன் கூடு 
விதைத்தது தவறானாலும் 
வீண் போவதில்லை 
அறுவடை ...!
வலிகள் அறியா 
மொழிகள் 
மருந்தானது காகிதத்தில் ...!

1 comment:

  1. அருமையான ஹைக்கூக்கள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145