மணிவண்ணன் ...! (15.06.13)



மணி சுற்றுகிறது மலர் வளையம் பற்ற 
வண்ணம் மறைந்தது ஏனோ ?அவர் 
எண்ணமெல்லாம் திரை இறைவா 
என்னது இது உன் குறைவா?

தந்தை இழந்த மகனுக்கு 
தன் கை உதிவி செய்தாயோ ?
மங்கையர் தாயின் குங்குமத்தை 
மரணத்தில் விதைத்தாயோ ?

சங்கமிக்கும் திரைக்கடலில் 
சரித்திரம் படைத்த கலங்கரை 
அங்கம் மட்டும் ஆடுகிறது மனையில் 
அடுத்த பாதரசம் இல்லாமல்
நகைச்சுவையே ...

ஒரு திரி எரியப் பல விழி கரையத்  
தேராய் போகும் கலையே உனக்காக 
உலகமே வழியனுப்பிவைத்தது  
நலலொரு திரைப் பிரம்மனை 
இழந்துவிட்டோமோ என்று !

(இவரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம் )

4 comments:

  1. கரையும் கண்களுடன் ஆத்ம சாந்தி வேண்டுதலில் நானும்...

    ReplyDelete
  2. சிறப்பான படைப்பாளி...

    அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
  3. சிறந்த இயக்குனர் சிறந்த மனிதர்! ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete
  4. "ஒரு திரி எரிய பல விழி கரையத்
    தேராய் போகும் கலையே உனக்காக
    உலகமே வழியனுப்பிவைத்தது
    நல்லொரு திரைப் பிரம்மனை
    இழந்துவிட்டோமோ என்று!" என்ற அடிகளில்
    மங்காப் புகழ் மணிவண்ணன்
    என்றும்
    நம்மாளுகள் நினைவூட்டுவர் என
    நம்பிக்கை வெளிப்படுகிறது!

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145