கோயிலாகட்டும் உலகம் ...!
தாய் பால் குடித்தால் 
தலைமுறை செழிக்கும் 
என்றது ஆச்சி முறை 

மது பீர் குடித்தால் 
மரணம் அழைக்கும் 
என்றது ஆட்சி முறை 

ஆச்சியா சாட்சியா 
அரசு விளம்பரங்கள் 

அறிவுக்கு எட்ட வில்லை 
ஆறறிவு மிருகத்திற்கு 

எடுப்பெடுத்தப் பேச்சும் 
எனக்கு நிகர் எவனடா 
என்ற ஏளனப் பேச்சும் 

ஐய்யோ முருகா ?
அசுரனை வதைத்தாய் 
தேவர்கள் சிறக்க 

ஆல்கஹாலை அழிக்க   
இன்னும் ஏன் தயக்கம் 

எடு மையில் விடு ஈட்டி 
கொடு புத்தி 
குடி மறந்து 
கோயிலாகட்டும் உலகம் ...!
2 comments:

 1. /// குடி மறந்து
  கோயிலாகட்டும் உலகம் ...! ///

  அருமை...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தொடருகிறேன் அண்ணா எல்லாம் உங்கள் ஆசி
   மிக்க நன்றிகள்

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...