ஆவி கதை ...!


ஜெனனம் மரணம் இவற்றின் ஏறுவரிசை தான் குழந்தை என்று நம்பிய எங்களுக்கு குழந்தை காணாமல் போனது பெரும் பாதிப்பை தந்தது அழுதோம் புலம்பினோம் இறைவனிடம் முறையிட்டோம் இருந்தும் குழந்தை கிடைக்காததால் உங்களிடம் புகார் கொடுக்க வந்துள்ளோம் சார் நீங்கள் தான் எங்கள் குழந்தையைக் கண்டு பிடித்துக் கொடுக்கவேண்டும் என்று கூறிச் சென்றார்கள் போலீஸும் தேடினார்கள் குழந்தை கிடைக்கவில்லை 

இரண்டு நாட்கள் சென்றது தீடிரென்று ஓர் நாள் போன் வந்தது உங்கள் குழந்தை வேண்டும் என்றால் நீங்கள் எனக்கு ஒரு கோடி தரவேண்டும் என்று இதை போலீஸில் சொன்னால் உங்கள் குழந்தையை கொன்றுவிடுவோம் என்றனர் அவர்களும் ஒகே நாங்கள் யாரிடமும் சொல்ல மாட்டோம் உனக்கு தேவையான பணத்தை எங்கு கொண்டு வருவது என்று கூறு என்றனர் உடனே அவர்கள் அதை நாளை சொல்கிறோம் என்று போனை வைத்துவிட்டார்கள் 

மறுநாள் காலையில் போன் வந்தது ஒரு நாள் வாழும் மறுநாள் வீழும் இடத்தில் பணப் பெட்டியை வைத்துவிட்டு சென்று விடுங்கள் உங்கள் வீட்டில் குழந்தை இருக்கும் என்று போனை வைத்துவிட்டார்கள்.

அந்தப் பெற்றோர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்ன செய்வது என்று குழப்பத்தில் இருக்கையில் முன்பு நடந்தது நினைவுக்கு வந்தது 

நிறை மாதம் தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்கையில் ஒரே மலை இடி மின்னல் இவர்கள் சென்ற கார் பழுதடைந்தது என்ன செய்வது என்று புரியாமல் திகைக்கையில் அருகில் இருந்த பூக்கடையில் உள்ள வயதானப் பாட்டியை உதவிக்கு அழைத்துப் பிரசவம் பார்க்கும்படி கேட்டார்கள் 

அவரும் தாயையும் சேயையும் காப்பாற்றினாள் இதற்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப் போகிறோமோ என்று வினவினர் அதற்கு அந்த வயதானவள் எனக்கு ஒன்றும் செய்யவேண்டாம் எனது கூடத்தில் ஐந்து அநாதைக் குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நீங்கள் உதவினால் போதும் அத்துடன் என் விதியும் நாளையுடன் முடிகிறது இதோ என் விலாசம் என்று கூற 

அவர்கள் வாங்க்கிக் கொண்டு கலையில் வந்து உங்களுக்கு உதவுகிறோம் என்று கூறிச் சென்றனர் மறுநாள் காலையில் அந்த மூதாட்டி இறந்துவிட்டார் இவர்கள் பணத்தை கொடுக்காமல் திரும்பியது நினைவுக்கு வந்தது உடனே அங்குள்ள சுடுகாட்றிற்கு போனார்கள் அங்கு அந்த முதியவள் அடக்கம் செய்த இடத்தில் நின்று அழுதார்கள் அச்சமயம் அந்த ஆவி பேச ஆரமித்தது 

நான் நீங்கள் பணம் கொடுப்பீர்கள் என்று நம்பி எனது வீட்டிற்கு சென்றேன் ஆனால் நான் இறந்தது தெரிந்து நீங்கள் பணத்தைக் கொடுக்காமல் திரும்பியதால் மனம் வருந்தி எனது ஆத்துமா சாந்தியடையாமல் உங்கள் பின் தொடர்ந்தது வழியில் கோயில் இருந்ததால் என்னால் உள்ளே செல்ல முடியவில்லை உடனே நான் இறவன் காலடியில் மண்டியிட்டேன் அப்போது இறவன் எனக்கு ஓரிரு நாள் மட்டும் வாழ அனுமதித்து உன் உயிர் எந்த உருவில் வாழவேண்டும் என்று சொல் என்றார் உடனே நான் மனித ஜென்மத்தின் மீது நம்பிக்கை இல்லாததால் ஒரு நாள் வாழும் மறுநாள் வீழும் பூவாக வாழ விரும்புகிறேன் என்றேன் இறைவன் அப்படியே ஆகட்டும் என்றார் அதே போல் நானும் வழக்கம் போல் பூவாங்கு கடைக்கு சென்று தனது பூக்களையெல்லாம் உதவிக்கு அழைத்து உங்கள் குழந்தையை சுடுகாட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன் இப்போது கூறுங்கள் ஏமாற்றுவது எவ்வளவு பாவம் என்று இதை நான் ஏன் உங்களுக்கு சொல்கிறேன் என்றால் என்னிடம் இருக்கும் குழந்தைகளும் உங்களைப் போல் யாரோ ஒருவரின் ஏமாற்றத்தால் பிறந்தவர்கள் தான் இப்போது அம்மா அப்பா இல்லாமல் அநாதை என்ற பெயரில் வாழ்கிறார்கள் எவ்வளவு கொடியது என்று இப்போது உணர்ந்திருப்பேர்கள் என்று நம்புகிறேன் என்றது அந்த ஆவி 

அவர்களும் தங்கள் தவறை உணர்ந்து அக்குடிசையில் வாழ்ந்த அநாதைக் குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் சென்று அவர்களுக்கு ஒரு நல்ல எதிற்காலத்தை உருவாக்கும் படி வாக்குறுதி அளித்தார்கள் அந்த முதியவளின் ஆத்துமாவும் சாந்தியடைந்தது .


நன்றி வணக்கம் !


2 comments:

  1. நல்லா இருக்கு சிந்தனை! இன்னும் கொஞ்சம் சீர் படுத்தினால் செம்மையாக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. நிஜம் தான் அண்ணா சும்மா முயற்சி செய்தேன் அவ்வளவு தான் அடுத்த முறை இதைவிட நன்றாக முயற்சிக்கிறேன் அண்ணா மிக்க நன்றிகள்

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145