பணம் < ? > பிணம்











என்னடா இது இன்று எல்லோரும் அதிசியமான நாள் என்று கூறுகிறார்கள் நீங்கள் பணமா ? பிணமா? என்று பேசுகிறேர்கள் என்று நினைக்கலாம் இருந்தும் ஏதோ என் சிற்றறிவுக்கு தோன்றியதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் .

மனித  வாழ்வில் முக்கியப் பங்கு வகிப்பது பணம் .
இந்தப் பணம் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்று தான் அர்த்தம் .
ஆம் இன்றைய சூழலில் பணத்திற்காக யார் யார் என்ன என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம் 

பணக்காரன் தன் பணத்தை பெருக்கிக்கொள்ள போராடுகிறான் 
ஏழை அதே பணத்திற்காக தன் வயதை பொருக்கிக்கொள்ள போராடுகிறான். 

இரண்டிற்கும் நடுவில் இருப்பது (?பிஒரே ஒரு கேள்விக்குறி தான் இந்தக் கேள்விகுறி எப்போது எங்கு மாறும் என்று இறைவனுக்கு தான் தெரியும் அதற்கிடையில் எத்தனை போராட்டங்கள்... 

அது மட்டுமா! அடிதடி, கொலை,கொள்ளைகள், கற்பழிப்பு, திருட்டு என்று பாவங்கள் பெருகிக்கொண்டே செல்கிறது உலகில். இதற்கு மூல காரணம் பணம் இல்லை என்றால் நீ பிணம் என்று மிரட்டல்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது பேப்பரில், அதையும் படித்துவிட்டு அதே பணத்திற்காக ஓடித் திரிகிறோம்  உறங்காமல் என்ன ஒரு கொடுமை சற்று யோசியுங்கள்.

எத்தனையோ உயிர்கள் ரோட்டிலும் காட்டிலும் பசிக்காக தங்கள் ரத்தத்தை உழைப்பாக்கி வியர்வையை முதலாக்கி நோயை வெற்றியாகக் கொண்டு வாழ்கிறார்கள்  நம் மண்ணில். இந்த நிலை மாறவேண்டும் என்றால் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவுவதை விட உவத்திரியம் செய்யாமல் இருந்தாலே போதும் என்று நினைக்கிறன்.

எப்படி என்றால் :-

வரி ,வட்டி, காப்பீடு அனைத்தும்  ஓர் ஏழையின் உறிஞ்சலில் கட்டும் சொத்துக்கள் அது மட்டுமா? விளம்பரம், போட்டிப் பரிசித் தொகைகள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இதை தவிர்த்து ஞாயமான முறையில் பொருட்களை வாங்கவோ விற்கவோ செய்தால் போதும் ஏழைகளும் எல்லா வசதிகளையும் பெற்று விட ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறன்.   

தனியொருவனுக்கு உணவில்லையெனில் , ஜகத்தினை அழித்திடுவோம் என்று  பாரதி சொன்னார் . அதை தான் நான் சுருக்கமாக "பணம் < ? > பிணம்" என்ற நோக்கில்  பிறந்தோம் வளர்ந்தோம் பசிக்காக பணத்தை நுகர்ந்தோம் அப்பணமே இறுதியில் நெற்றிப் பொட்டாக  வெட்டியான் கைக்கு செல்கிறது.மீண்டும் மறு சுழற்சி முறையில் எங்கோ முடிவில்லா தண்டவாளம் போல் போய்க்கொண்டே இருக்கும். இடையில் இருப்பது வெறும் மண் தான் மனிதா மாறு உன் மரணம் முடியும் வரை ! அப்படியாவது நம் பூமியும் பொன்னாகட்டும் .

நன்றிகள் !

6 comments:

  1. ஹா ஹா ஹா எல்லாம் தெரிந்தும் பணத்தை தேடுகிறோம் உயிர் வாழ, பணம் இல்லையேல்....ஹாஹ்ஹா ஹாஹ்ஹா

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்திற்கு நன்றிகள் அண்ணா

      Delete
  2. நல்லதொரு சிந்தனை! அருமையான பகிர்வு!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  3. வாழ்க்கையில் பணம் முக்கியமே/ஆனால் பனம் மட்டுமே வாழ்க்கை அல்ல/

    ReplyDelete
    Replies
    1. நிஜதாம் பணம் இல்லை என்றால் உயிர் வாழ முடியாது அதற்காக பணமே வாழ்க்கையாக இருப்பது தான் தவறு !

      நன்றிகள் சார்

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145