ஹலோ சுவாதியாமா ?
எஸ் நீங்க யாரு ?
நானா மதுரையில இருந்து பேசுறேன்மா தரகர் தான் இந்த நம்பரை கொடுத்து கால் பண்ண சொன்னார்
ஒ அப்படியா ஒகே ஒகே சொல்லுங்கள்
என் பையன் பெயர் குமார் வயது 30 அவன் பி.காம் படிச்சிட்டு ஒரு தனியார் கம்பெனியில வேலை பாக்கிறான் மாதம் 15000 சம்பளம் ஒரே பையன் இரண்டு தங்கைகள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது அவர்கள் திருமணத்திற்காககிக் காத்திருந்தான் எல்லாம் நல்ல படியாக முடிந்தது இப்போது உன்னை அவனுக்காகப் பொண்ணுப் பாக்கிறோம் கொஞ்சம் உன்னைப் பற்றி சொல்லுமா
ஒ அப்படியா ? நானும் பி.காம் தான் படிசிருகிறேன் சென்னையில ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன் மாதம் 10000 சம்பளம்
சரிமா உன்னோட நம்பர என் பையன்ட்ட கொடுத்து பேச சொல்லுறேன்
ஒகே என்றாள் சுவாதி
மறுநாள் அந்தப் பையன் கால் பண்ணினான் சுவாதியோ கொஞ்சம் வேலை பளு காரணத்தால் மாலையில் கால் பண்ணும் படி சொன்னாள்
அவனும் ஒகே சென்று சொல்லி போனை வைத்தான்
மாலை ஆனது போன் கால் வரவில்லை சுவாதி மனதில் குழப்பம் ஏற்பட்டது உடனே குமாரின் அப்பாவிற்குக் கால் செய்தாள் நடந்ததைச் சொன்னாள் அதற்கு அவர் சொன்ன பதில் என் பையனுக்கு வேலை முடிந்து வர 7 மணி ஆகும் வந்ததும் நான் கால் பண்ண சொல்கிறேன் என்றார் சுவாதியும் ஒகே என்று சொல்லி போனை வைத்தாள்
வைத்த சில நிமிடங்களில் ஒரு கால் வந்தது ஹெலோ என்றாள் நீங்கள் சுவாதியா?
எஸ்
நான்தான் குமார் பேசுறேன் எங்க அப்பா சொன்னாங்க நீங்க கால் பண்ணுனதா
ஆமாம் மதியம் என்னால் பேசமுடியவில்லை நீங்கள் தவறாக நினைத்திருபேர்களோ என்று உங்கள் அப்பா எண்ணிற்கு அழைத்தேன்
ம்ம்ம் ஒகே ஒகே என்னைப் பற்றி உங்களிடம் ஏற்கனவே அப்பா சொல்லிருப்பார்கள் இருந்தும் சொல்கிறேன் புது நிறம், 6 அடி 50 கிலோ இருப்பேன், வேறு ஏதாவது கேட்கவேண்டுமா கேளுங்கள் சொல்கிறேன்
ம்ம்ம் கேட்க வேண்டும் அனால் தவறாக எண்ணக் கூடாது உங்களுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இருக்கு
அப்படி என்றால் என்ன ?
சிகிரட் தண்ணி அடிப்பது இதைப் பற்றி தான் கேட்டேன்
ஓ அப்படியா இது மட்டும் இல்லாமல் வேற கெட்ட பழக்கம் இருந்தா ஒகேவா ?
ஹெலோ என்ன இது எல்லாம் விவரமாகக் கூறமுடியுமா? கெட்ட பழக்கம் என்றால் எல்லாம் அதில் அடங்கும் ஒகே
ஒகே ஒகே கோவமா? இல்லை சும்மாதான் கேட்டேன். நான் இப்போம் பொய் சொல்லிட்டு பின்னாடி தெரியவந்த என்ன பன்னுவேங்க ?
உங்களுக்கு மனசாட்ச்சினு ஒன்னு இருக்க அப்படி இருந்தா பொய் சொல்ல மாட்டங்க
ம்ம் ஒகே ஒகே நீங்க எப்படி இருப்பேங்க
நான் சுமாரா இருப்பேன் ஏன்?
ஏதாவது நடிகை மாதிரி இருப்பேங்களா?
நான் நடிகை மாதிரி இருந்தால் நடிக்கப் போயிருப்பேன்
ஓகே ஒகே கோவமா ?
இல்லையே உண்மையத் தான் சொன்னேன்
ம்ம்ம் சுவாதி ஒன்று கேட்டல் நீங்கள் தவறாக நினைக்க மாட்டேர்களே
இல்லை சொல்லுங்கள்
உங்களுக்கு Boy Friend இருக்காங்களா?
என்ன ? இல்லையே
ஏன்னா இப்போம் சின்னப் பிள்ளைங்கள் கூடச் செல் போன் யூஸ் பண்ணுறாங்க மணிகணக்க போன் பேசுறாங்க ஊரு விட்டு ஊரு வந்த வேலை செய்றவுங்களும் இப்படித் தான் இருக்காங்க காலம் கெட்டுப் போச்சி அதன் கேட்டேன்
ஒ அப்படியா உங்க பார்வையில் வென இப்படி இருக்கலாம் சில பொண்ணுங்க அப்படி இருப்பாங்க அதுக்காக மொத்தமா பெண்களைத் தவறாக நினைப்பது தப்பு உங்களுக்கும் பெண்களோட தொடர்பு இருக்கலாமே அதுக்கும் நானும் உங்களை தப்பா நினைக்க முடியுமா ?
சரி தான் நான் அந்த அளவுக்கு நடந்துக்க மாட்டேன் இல்லேன இந்தமாதிரியான கேள்வி கேட்கமாட்டேன் ஒகே உங்களுக்கு என்ன புடிச்சிருக்கா இல்லையா அத சொல்லுங்கள் சுவாதி
உடனே சொல்ல முடியாது எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் என்றாள் சுவாதி
ஒகே என்று போனை வைத்தான் குமார்
மறு நாள் தன் தோழியிடம் நடந்ததை கூறினாள் அவர்கள் எல்லோரும் குமாரை தவறாகவே கூறினார்கள் காரணம் திருமணத்திற்கு முன்பே சந்தேகப்படுகிறவன் வேண்டாம் என்றார்கள் அவளும் சரி என்றாள்
அன்று இரவு குமாரிடம் இருந்து அழைப்பு வந்தது என்னோட போட்டோவை உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கும் அனுபியுள்ளேன் பார்த்துவிட்டு கூறுங்கள் அப்படியே உங்கள் போட்டோவையும் அனுப்புங்கள் என்றான்
இரண்டு நாட்கள் ஆனது சுவாதி போட்டோவை பார்த்து பதில் கூறவில்லை,அவள் போட்டோவையும் அனுப்பவில்லை மனதில் அரை குழப்பத்துடன் இருந்தாள் இறைவனை பிராத்தனை செய்து கொண்டாள் என் வாழ்க்கையை உன்னுடன் ஒப்படைத்துவிட்டேன் இனி நீதான் எனக்கு ஸ்ரீராமன் போல் கணவன் கிடைக்க அருள் புரியவேண்டும் என்று தூங்கிவிட்டாள்
மறு நாள் குமார் போன் செய்தான் சுவாதி பேசினாள் ஹலோ மேடம் என் போட்டோவை பார்த்தீர்களா என்றான்
ம்ம் பார்த்தேன் தாங்கள் எந்த மாதிரியான குணம் படைத்தவர்கள் என்று எனக்கு தெரியாது இருந்தும் நீங்கள் சந்தேகப்படுபவர்கள் என்று புரிந்தது
அப்படியெல்லாம் ஒற்றும் இல்லை என் தோழன் ஒருவனுக்கு திருமணம் நிச்சையம் ஆனது அவனும் சந்தோசத்தில் இருந்தான் திடிரென்று அந்தப் பெண் தான் வேறொருவனை காதலிக்கிறேன் என்று திருமணத்தை நிறுத்திவிட்டாள் இந்த சம்பவத்தில் என் தோழன் மிகவும் பாதிக்கப்பட்டான் அதன் அப்படி கேட்டேன். மற்றப்படி நான் ஒன்றும் பெரிய அழகன் இல்லை நான் அழகா இல்லை என்றதும் இப்படி ஒரு கேள்வியா ?
இல்லை இல்லை நான் என்றுமே அழகை பார்ப்பதில்லை Characters தான் பார்ப்பேன் உங்கள் Characters என் விருப்பம் போல் இருந்தால் எனக்கு ஒகே என்றாள்
நாட்கள் நகர்ந்தது குமாரிடம் இருந்தும் எந்த அழைப்பும் வரவில்லை
சுவாதி மனம் ஓடிந்தாள் எல்லாம் நன்மைக்கே என்று கடவுளின் சன்னதிக்கு சென்றாள் இறைவா ?என்ன இது சோதனை என்று முறையிட்டாள் மனப் பாரத்தை அங்கே விட்டுவிட்டு வீடு திரும்பினாள்
எதிரில் குமார் ஒரு பெண்ணுடன் போவதைக் கண்டாள் மனம் குமிறியது என்னிடம் அத்தனை கேள்வி கேட்டவன் இன்று வேறொரு பெண்ணிடம் ஜோடியாக செல்வதை கண்கொண்டு வருந்தினாள் . இன்றைய திருமணம் என்பது ஒரு கேளிக்கையாகவே மாறிவிட்டது என்று உனர்ந்தாள் ஒரு கெட்டவனுக்காக தன் கண்ணீரை வீணக்க வேண்டும் என்று நினைக்கும் போது தான் நினைவுக்கு வந்தது
அன்று குமாரின் தோழன் கதையை சொல்லும் போது சுவாதி கூறியது ஒருவரை நாம் ஏமாற்றினால் கண்டிப்பாக நம்மளை ஏமாற்ற ஒருவர் உண்டு அதே போல் தான் உங்கள் நண்பர் என்றோ ஓர் தவறை செய்திருப்பார் அதான் அவருக்கு இந்தமாதிரியான தவறு நிகழ்ந்தது என்றும்
யாரோ செய்த புண்ணியம் திருமணத்திற்கு முன்பே தெரிந்தது இதை நினைத்து உங்கள் நண்பர் பெருமைப் படவேண்டும் என்றும் திருமணத்திற்கு பின் நடந்தால் உங்கள் தோழன் வாழ்க்கை வீணாகிருக்கும் என்றும் இனிமேல் இந்தமாதிரி தவறுகள் செய்யாமல் இருப்பார் என்றும் கூறியது நினைவுக்கு வந்தது.
விடை கிடைத்தது சுவாதி மனம் பூவாக மாறியது இறைவனுக்கு நன்றி கூறி தன வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தாள்
அப்போது ஒரு பெரியவர் முன் வந்து திருமணம் என்பது
(திரு + மனம் = திருமணம் )
இரண்டு திரு உருவங்கள் இணையும் இல்லற உலகம் அதில் தவறுகள் திருத்தப்படலாம் தண்டனைகள் வேண்டாம் என்று நினைப்பவர்கள் வாழ்க்கை நிச்சியம் ஒளிமயமான உலகத்தை காட்டும்
மூன்று முடிச்சு
ஒன்று பூமிக்கும் மற்றொன்று வானுக்கும் மீதி இருக்கும் மூன்றாம் முடிச்சு இறந்து மோட்சம் பெரும் சொர்கத்திற்கும் தான்
ஆகவே பிறகும் போது பூமிக்கு நன்மை செய் பிறந்து வளர்ந்த பின் வானுக்கு நன்மை செய் இரண்டும் முடிந்தால் நிச்சையம் சொர்க்கம் தான் இதை உணர்த்தவே அந்த மூன்று முடிச்சு
அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது
கணவனை கடவுளாக நினைப்பவளுக்கு கல் போன்ற இதயம் வேண்டும் ஏன் தெரியுமா ? படி தாண்டா பத்தினி யாக வளம் வரவே இந்த சம்பிரதாயம்
கணவனுக்கு மட்டும் ஒன்று இல்லைம் என்று நினைக்காதீர்கள் ?
கடலளவு பெண்களை கண்டாலும் கடுகளவு கூட துரோகம் செய்யாதவனே கணவன்
மொத்தத்தில் காலம் கலிகாலமாய் மாறாமல் இருக்க ஓரளவு நீதியுடன் வாழ்ந்தால் போதும்
இப்போது புரிந்ததா மகளே செல் காலம் உனக்காக காத்திருகிறது உன் கடமைகளை நிறைவேற்ற கலங்காதே உனக்கும் உன் ஆசைபோல் கணவன் கிடைப்பான் வருந்தாதே மகளே
அவரவர் விதியை ஆண்டவன் எழுதுவதில்லை அவரவரே தான் எழுதுகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்தால் போதும் வாழ்க்கை சிறக்கும் .
என்றதும் அவ்வுருவம் மறைந்தது சுவாதியும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றாள்.
/// அவரவர் வீதியை ஆண்டவன் எழுதுவதில்லை அவரவரே தான் எழுதுகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்தால் போதும் வாழ்க்கை சிறக்கும் . ///
ReplyDeleteஇதை விட என்ன வேண்டும்...?
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.... வாழ்த்துக்கள்...
மிக்க நன்றிகள் அண்ணா
Delete