சரஸ்வதி வாழ்த்து .....!வெள்ளை கமலத்தில் வீற்றிருப்பவள்
வெண்ணிற ஆடையை பூட்டிருப்பவள்

கண்ணின் மயில்போல கையில் வீணையும்
காற்றின் கைவிரல் நரம்பில் கானமுடன்

எழுத்து அறிவித்த இசையால்வாள் என்றும்
இன்முக சிரிப்பினிலே பன்முக கைமொழியாள்

பாதத்தில் சூடிருக்கும் கங்கை கன்னியின்
காதல் ஒளியில் புஞ்சை பூவியும்

செவி மடக்க புத்துயிர் பெற்ற வாணியின்
செங்காந்த இதழில் சொல்சுவையாய்

சங்கும் மணியும் வானின் ஒளியாய்
சகல வினைகளையும் தங்குதடையின்றி நீக்கி

தன்னை நம்பிய அன்பர்களுக்கு
அள்ளி அள்ளி வழங்கும் அன்னையாய்

கல்வியே கண்ணாய் கொண்ட காலத்தில்
கண் திறக்கும் தேவியாய் கலை வாணியே

நீ முப்பெரும் தேவியிலே முதற்முதல்
கடவுளாய் காட்சி தந்து ஆட்சி செய்யும்

தாயே உன் பேர் சரஸ்வதியாய் பின் பேர்
கொண்ட மக்களின் விதியை மாற்றும்

சாரிர ராகமாய் அவுளு பொரியுடன்
அனைவரின் வீட்டில் பூஜிக்கும் பள்ளி தெய்வமே

உன் பாதம் வணங்கி வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் போற்றுகிறோம்


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...