என்ன சிதறல்கள்...!


தூயவனே ...! துணிந்து நில்
தூர வானம் கூட
கானம் கேட்கும் உன்
கவியை கேட்டு

நானும் இசைக்கிறேன்
குமுதமான அன்னையின்
அமுதம் பருகிய

ஆண் மகனைப் பெற்ற
தாயிமையின்
வரிகளை சரணமாய் - பின்

கொடியிடை குமரியின்
தனியிடை மடியில் தவழும்
காதல் மொழியை பணிவிடையாய்
பூத்த பல்லவியும் - பின்

தொடர் மழைச் சாரலில்
கொடை மழை நிழலாய்
உயிர் மழை காக்கும்
நண்பனின் துயர் மழையாய்
துரத்தும் அன்பு மழையில்
முடிக்கும் மணிக்கு

இந்த நொடி மழையின்
நல் வாழ்த்துக்களை
வாரமாக்கி மாதமாக்கி பின்
வருடமாக வாழ வாழ்த்துக்கள் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)