தங்கமும் செல் போல் மாறும்




நண்பரே வாருங்கள் அடுத்து ஒரு கேள்வி ?

நம் முன்னோர்கள் காலத்தில் தங்கத்தின் விலை அணா கணக்கில் இருந்தது நம் காலத்தில் சுமார் எழு வருடங்களுக்கு முன் ஒரு கிராம் தங்கம்  ஐந்து  நூறு ரூபாய்யாக இருந்தது அனால் இன்று ஒரு கிராம் தங்கம் முவ்வாயிரம் இப்படி வரக் காரணம் யார்? நாம் தான் ஒரு காலக் கட்டத்தில் தங்கம் இரு மடங்காக அதிகரிக்கும் போது மக்கள் மோகம் தங்கத்தை நோக்கியது அதனால் தான் தங்கம் விலை அதிகரித்தது இதே போல் இன்னும் தொடர்ந்து கொண்டே போனால் தங்கம் வாங்க முடியுமா ?முடியாது ஆனால் பின் வரும் காலத்தில் பணத்தை வாங்க இந்த தங்கம் ஈடாகாது மீண்டும் நாம் பண்ட மாற்று முறையை தான் கையாடவேண்டும் எப்படி என்று கூறுகிறேன் இனி வருங்காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தங்கம் கிலோ கணக்கில் இருக்கும் ஆனால் பணம் எல்லாம் ஒரே இடத்தில் எங்கோ குவிந்துவிடும் அப்போது தங்கத்தை வைத்து உணவு உண்ண  முடியுமா ?முடியாது அக்கணம் நாம்  உணவுக்காக தங்கத்தை குறைந்த விலைக்கு பணமாக மாற்றி உணவு தானியங்களை நாம் வாங்கும் சூழல் வந்துவிடும் அப்போது பணம் தான் மூலகாரணமாக இருக்கும் என்ன ஒரு கொடுமை பாருங்கள் நாட்டில் எல்லாவற்றையும் விற்று விட்டோம். இப்போது பணத்தையும் விற்பனை சந்தையில் விற்கும் நிலை வரவேண்டுமா ?அச்சமயம் நம் நாட்டுக்காக தியாகங்கள் செய்தவர்கள் ஒரு விற்பனை பொருளாக மாறுகிறதை நினைத்து பாருங்கள் கண்கள் கூசும் பூமி தாய் கண்களில் எரிமலைகள் பொங்கும்  நாடே சாம்பலாக மாறும் நினைத்தாலே கொடுமையாக உள்ளதா ? இதோ

அதற்கு  ஒரு சரியான எடுத்துக்காட்டு தருகிறேன் 


நம் விஞ்ஞான வளர்ச்சியில் முதலிடம் வகிப்பது செல் போன் இந்த செல் போன் வந்த காலத்தில் ஒரு காலுக்கு ஒரு ரூபாய் அதே வெளியூர் காலுக்கு மூன்று ரூபாயாக இருந்தது.எஸ்.எம்.எஸ் கூட ஒரு ரூபாய் வாங்கினார்கள் அப்படியே வளர வளர செல் போன் மாடல் கூடியது ரகங்களும் பலவாறு வந்தது அதை மக்களும் வாங்கி வாங்கி பயன் பெற்றார்கள்.அது மட்டுமா ஒவ்வொருவருக்கும் ஒன்று இரண்டு போன்கள் என்று வைத்துகொண்டார்கள் இப்போது ஒரு காலுக்கு பத்து பைசா ப்ரீஎஸ்.எம்.எஸ் பூஸ்டர் கார்டு விலை மதிப்பே இல்லாமல் பேச மாதந்திரக் கட்டணம் விஞ்ஞானம் வளர்ந்தது அத்தோடு மெஞ்ஞானமும் அழிந்தது எந்த பொருளுமே வரும் போது இருக்கும் மௌசு நாளடைவில் குறையும் இது இயற்கை இது புரியாமல் மக்கள் குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல்  ஒரே பாதையில் சென்றால் ஏழை மக்கள் என்ன செய்வார்கள் யோசியுங்கள்?

நன்றி !

( சும்மாங்க ஒரு புதிய கோணத்தில் எழுத முயற்சித்தேன் படித்து  குறைகளை கூறுங்கள் )


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

4 comments:

  1. வணக்கம் ஹிஷாலி,

    தங்கத்தின் விலையேற்றத்துக்கு முக்கிய காரணிகள் நிறையவே இருக்கு ...
    குறிப்பாக சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வசதி படைத்தவர்கள் தங்களின் வசதியை வெளிக்கொணர
    ஆபரணங்களை அணிந்து காட்டினர் ... சிலர் மட்டுமே அதை சேமிப்பு என்று எண்ணி வாங்கி வைத்துகொண்டனர் ..
    இன்றோ உழவு நிலங்களை மனைகளாக்கி பணம் பார்த்து பின்பு அதில் நட்டம் வந்ததும் வேறு ஒரு சேமிப்பை நோக்கிய கண்களுக்கு சிக்கியது இந்த தங்கம், அதனால் பணம் இருப்பவர்கள் வாங்கி குவித்ததின் விளைவு விலை தாறுமாறாய் எகிறி
    இன்று சாமானிய மக்களுக்கு எட்டாக்கனி இந்த தங்கம் .. நீங்கள் சொல்வது இந்த தங்கம் பண்ட மாற்று முறைக்கு வருவதற்கு சாத்தியமல்ல என்றே நம்புகிறேன் . இப்போது சாமானியர்களின் கையில் இந்த தங்க இருப்பு வெகு குறைவு ..

    மீண்டும் தானியங்கள் விளையும் என்று நினைப்பது எல்லாமே பகல் கனவுதான் ... என்றுமே இந்த மக்கள் வேறு ஒரு முதலீடு மீது செய்யும் ஆர்வம் துளியுமில்லை விவசாயத்தின் மீது ,... அப்புறம் எப்படி சாத்தியம் ..

    அப்புறம் மொபைல் அத்தியாவசிய தேவையாகி போன ஒன்று .. இது இல்லாமல் இந்த உலகம் இயங்குவது மிக கடினம்...
    சந்தையில் காய்கறி அளவுக்கு கூவி விற்பது கண்கூடாக காணும் நிலைமை .. இது வீழ்ச்சிக்கு இருந்தாலும் வளர்ச்சியிலும் இதன் பங்கு இருக்கிறது .. எது எப்படியோ இந்தியர்களை முட்டாள்களாக்கி அந்நிய நாடுகள் லாபம் அடைந்து வருகின்றன .. மக்கள் சிந்திக்கணும் .. உங்கள் எழுத்துக்கள் ஆரம்பம் தான் இன்னும் நிறைய கோணங்களில் சிந்தித்து எழுத வேண்டுகிறேன் .. நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றிகள் பல

      மேலும் தாங்கள் கூறும் கருத்து மிகவும் சரிதான். நானும் இப்போது தான் இந்த புதிய முயற்சிக்கு தொடர் புள்ளி வைத்திருக்கிறேன் இன்னும் போக போக சிந்தனைகள் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்

      மேலும் நான் பண்ட மாற்று முறை என்று கூறியது தானியங்களை மையமாக வைத்து அல்ல ஒரு கிலோ தங்கத்திற்கு பணம் பொருளாக வாங்க்கும் நிலையை கூறினேன் அந்தப் பணத்தை வைத்து மீண்டும் தானியங்கள் வாங்கும் நிலை வரும் என்று ஓர் கற்பனை அவ்வளவுதான்

      உங்கள் அளவுக்கு நான் சிறந்தவள் இல்லை ஏதோ சின்ன பொண்ணு தெரிந்த கற்பனையில் எழுதினேன்

      இன்னும் முயற்சிக்கிறேன் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் அரசன்

      நன்றிகள் பல

      Delete
  2. தேவைக்கு மேல் தங்கம் - பேராசையின் மறு உருவம்...

    மொபைல் - ஆறாவது விரல்...

    ReplyDelete
    Replies
    1. அழகான விளக்கம் அண்ணா நன்றிகள் பல

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145