நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!


அறிமுகம் என்னவோ நீ
அண்ணனின் நண்பன்...
துணை முகமாக என்னை
தோழியாக்கியவனே இருவரும்
கணிமுக தொடரில்
ஒருமுகம் பதித்தோம்...

நட்புகள் நாளுக்கு நாள்
நலம் பெற...
பெயரை மறந்து
போட போடி என்று
போட்டி போட்டு நட்பை
கூறு போட்டோம்....

எவர் மனம் புண்பட்டதோ
எம்மிருவர் நட்பில்
ஏழரை நாட்டு சனிபோல்
என் இதழ் நான் உன் காதலியா
என்று கேட்டதால்
இரு கரையாக பிரிந்தோம்
இதயங்கள் பேசாமல்

பிரிவின் வலி இணைக்கும்
என்ற ஆசையில் காத்திருந்தேன்
ஆண்டுகள் ஆழத் தொடங்கியது
அமைதிகள் மோதத் தொடங்கியது
கனவில் கூட சேரவில்லை
காயங்கள் இன்னும் ஆறவில்லை

இதயம் கல்லான உன்னில்
நானே மீண்டும் இணைய
வந்தேன் என் அன்பே
நீ இணைந்த மறுகணமே
கல்லாய் மாறிவிட்டாய் என்
காதலைக் கண்டா இல்லை
உன் காதலை கொண்டா

பேசாமலே பேசுகிறாய்
இருவருக்கும் புரியாமல்
மின்னலே பாடலில்
நெஞ்சை பூப் போல் கொய்தவளே

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...