விவசாயின் ஏக்கம் ?


காலை கதிரவன் தான் எழுப்ப
களத்துமேட்டு பெண் மயில் தோகைவிரிக்க
ஓலை குடிசையிலே ஒய்யாரமா கோழி கத்த
ஒதுங்கிய நாயிகள் கூட்டம்
ஒருத்தரை ஒருத்தர் ஏங்கி பார்க்க

கண்டாங்கிச் சேலை கட்டி
கை நெறைய வளையல் போட்டு
சின்ன வகிடெடுத்து செந்தூர பொட்டு வச்சு
கன்னி சிரிப்பாலே கம்மங்கூல் எடுத்து வச்சி
வயல் மேட்டுக்கு வழியனுப்பும்
வாயாடி பொஞ்சாதியே வரட்டுமாடி நானும்

ஏங்க ஏர் கலப்ப பூட்டிவிட்டு
எருதுகளை மேயவிட்டு
வேண்டாத களையெல்லாம்
வேரோட அறுத்துவிட்டு
தங்க பூமிக்குள்ளே தாவரங்கள்
தூவி விட்டு

மஞ்சனத்தி மரத்தெல்லாம்
மாட்டுக்காக கட்டிக்கிட்டு
வானம் மயங்கும் முன்னே மாமா
வந்து சேறு குடிசைக்கு நான்
வாள மீனு சமச்சி வச்சி
வக்கனைய விருந்துவைகிறேன்

எல்லாம் கனவாக போனதே இப்போம்
காணி நிலம் கட்டிடமா ஏறுதே
அன்று வகை வகையா விளைஞ்ச பூமி
இப்போம் பிளாஸ்டிக்காலே விஷமா மாறுதே

என் வைரம் பாஞ்ச கட்ட இப்போம்
வாட்டுதடி மூச்சி முட்ட சற்று
இளைப்பாற இடமும் இல்லை
ஏர் பூட்ட வயதுமில்லை
ஏக்கத்தில் நிக்குதடி பூமி
இத எழுதியவன் மாற்றலடி சாமி

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...