வெண்ணிலாவே ....!


நச்சத்திரங்கள் கோடி கோடி சூழ - அதன்
நடுவினிலே நீந்திவரும் வெண்ணிலாவே ....!

பாலும் சோறும் பகிர்ந்தூட்டும் - தாயின்
பாடல் பாடும் வெண்ணிலாவே ......!

இரவையும் பகலாய் மாற்றி - உன்னை
இராகுவும் விழுங்கிடுமோ வெண்ணிலாவே ....!

வளர்ந்து வளர்ந்து வட்டவடிவமாய் மாறி - மீண்டும்
வாடிவாடி மறைவதேனோ வெண்ணிலாவே .....!

கூகை ஆந்தை போலவே - பகல்
கூட்டினில் உறங்கும் வெண்ணிலாவே ......!

காலத்தின் கடமையில் நிதமும் - நீ
கால் பாதி வாழ்ந்திடும் வெண்ணிலாவே .....!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...