நண்பனே நிலையான சுமை ....!


ஐந்து நொடி ஆசையில்
அன்பை சுமந்தவள்
பலனாய் ஈரைந்து மாதம்
என்னை சுமந்து விட்டுவிட்டப் பின்

கண்ணிற்கு கண்ணாய்
மண்ணை சுமந்து பின்
மாதங்களை சுமந்து
கண்ணனாய் காதலை சுமந்து

மன்னனாய் மாலை சூடிய
நண்பனை சுமந்த இதயத்தில்
துடிப்புகள் மறந்து
துளையிட்ட பூமிக்கு

ஆறடி அங்கம் சுமக்கும்
போது தங்கமாய் கை
கோர்க்கும் நண்பனின்
சுமையே நிலையான சுமை ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 24

அந்த பட்டாம் பூச்சி  என்ன விலை  வாங்கிக்கொள்கிறேன்  அந்த ஏழு நாட்களுக்கு பின்