வறுமை ...!
வயிறுகள் அழுதல் 
வறுமை 

வரப்புகள் இழந்தால் 
வறுமை 

நெருப்புகள் அணைந்தால் 
வறுமை 

நெஞ்சங்கள் எதிர்த்தால் 
வறுமை 

உறவுகள் வெறுத்தால் 
வறுமை 

உணர்வுகள் எரித்தால் 
வறுமை 

காதலில் தோற்றால் 
வறுமை 

காலம் வதைத்தால் 
வறுமை 

எங்கும் வறுமை 
எதிலும் வறுமை 
என்று எழுதிவிட்டோம் - இதை 

அழிக்க ஆளில்லை 
அரவணைக்கத் தோளில்லை 
தொடர்ந்து கொண்டே போகிறது 
தொற்று வியாதியாய் 

இதை விரட்ட யாருமில்லை 
விடைத் தேடும் கேள்வியாய் 
வராவிட்டால் 
வாழ்வில் இல்லை பெருமை 

அருமையாய் சொன்னார்கள் 
சிறுமையிலும் வறுமையை 
ஆதரிக்கிறோம் 
வறுமை ஒழிப்பு தினம் என்று ...!


2 comments:

  1. உண்மை...

    வறுமை மிகவும் கொடுமை... (அதுவும் இளமையில்...)

    ReplyDelete
  2. நிஜம் தான் அண்ணா என்ன செய்வது வறுமை ஒழிக்க இதுவரை யாரும் முன்வரவில்லையே ?

    மிக்க நன்றிகள் அண்ணா

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

புரிதலின்றி பிரிதல் ...!

ராமூ சோனா இருவரும் நல்ல நண்பர்கள் ஒரு நாள் சோனாவிற்கு எதோ தெரியத எண்ணில் இருந்து ஒரு குறுந்செய்தி (காதல் என்ற வார்த்தையை உபயோகித்து ...