என் மறு பக்கம்...!


என் ஊரு மதுரப் பக்கம்
எனக்குள்ளும் ஆயிரம் வெக்கம்
எனக்கில்லை காதல் பக்கம் - இருந்தும்
எழுந்துவிட்டேன் கவிதை சொர்க்கம்

பிறந்ததும் பாட்டியின் பக்கம்
பேர்வைத்தது பள்ளியின் பக்கம்
படித்துவிட்டேன் ஒழுக்கத்தின் பக்கம் - இருந்தும்
பாரினிலே கண்ணீர் சொர்க்கம்

தந்தையோ மதுவின் பக்கம்
தாயோ தங்கையின் பக்கம்
தனிமையே வாழ்வின் பக்கம் - இருந்தும்
தன்னடக்கமே என் வயதின் சொர்க்கம்

கடந்துவிட்டேன் பூவின் பக்கம்
கல்யாணமோ தோல்வியின் பக்கம்
காலமோ முதுமையின் பக்கம் - இருந்தும்
கண்ணகியாய் சாவதே என் மூச்சின் சொர்க்கம்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

முத்துக் கமலம் 15 ஜூலை 2017 ல் ஹைக்கூ

காற்றில்  பேயாகத் திரிகிறது  உதிரிப்பூக்கள் ! கீழ் வானம்  மெல்லச் சிவக்கிறது  தாவணிப்பூக்கள...