சுஜாதா - ரங்கராஜன்


கவிதைக்கு உயிரே அதன்
சுவையை கவிதையாய் தந்தேரோ

பருகும் மொழி சங்கத்தில் நீர்
உருகும் வரி அங்கம் படைத்தேரோ

காதலை கவிதை வடித்து
காகிதமாய் கலை வடித்தேரோ

சாபமும் காமமும் சரி பாதியாய்
சங்கமிக்கும் சாட்டையடியில் சாட்சிபடைத்தேரோ

வேட்டையாடிய வெள்ளி திரை முதல்
சின்ன திரை வரை சீறி பாயிந்தேரோ

முத்துக்களாய் பதித்த தமிழ் சொத்துக்களை
சேவையை சோலையில் தூவிநேரோ

இயல் இசை நாடகமாய் பூத்து
ஈன்ற வாசத்தின் வேராய் மலர்ந்தேரோ

ஏழு கடல் புகுத்திய குறளையும்
எளிய உரை வடித்து பறை சாற்றேரோ

தன் பெயர் கொண்ட மாற்றத்தால் தன்
தலைவி பெயர் சூடி மகிழ்ந்தேரோ

நீ பிறந்த தமிழ் மண்ணில் நீங்காத
சுவையின் சுவிட்சமாய் சுஜாதாவாய் வாழ்ந்தேரோ

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145