வெண் மேகமே ....!


நீல மேகமே ...!
உன் நிழல் பிம்பம் தான்
இந்த வெண் மேகமோ ....!

கண்மேகாய் சுற்றும் காற்றில்
கவி பாடும் குயிகளும்
ஜதி ஆடும் மயில்களும்
மொழியில்லா தென்றலும்
சேர்ந்து இசைக்கும் தாளத்தில்

உப்பாய் கிடந்த கடலும்
தப்பாய் பிறந்த பாவத்தில்
செப்பாய் மொழியாய் உன்
செவ்விதழ் வருடியதால்

மெய் விழி திறந்து
நீர் விழியாய் பயணிப்பது
நவ விழி கிரகங்களும்
பகை விழி இல்லாமல்

இப் பூவிழி மடியில்
தேன் துளியாய் படுத்துரங்கும்
தாய் விழியாய் மாறிய
ஓர் விழி பெண்ணாய்

உலகையே தாங்கும்
வான் விழி தேவதையே
நீ வருக வருக
பின் தருக தருக நான்
பருக பருக மீண்டு
பெருக பெருக வாழ்த்துகிறேன் ...!

4 comments:

  1. அழகான அருமையான கவிதை... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. 43 கவிதைகள்... வியக்க வைக்கிறது...!!!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145